தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆக நீண்ட விமானச் சேவை; இருமுறை சூரிய உதயத்தைக் காணலாம்

1 mins read
c307ea07-1523-43ac-b8e7-a9816f8f4881
‘புரோஜெக்ட் சன்ரைஸ்’ திட்டத்தின்கீழான புதிய விமானச் சேவை 2026ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இணையம்

சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவாண்டஸ் விமான நிறுவனம் உலகின் ஆக நீண்ட விமானச் சேவையை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

‘புரோஜெக்ட் சன்ரைஸ்’ எனும் திட்டத்தின்கீழ் சிட்னியிலிருந்து லண்டனுக்கும் நியூயார்க்கிற்கும் இடைநில்லா விமானச் சேவைகளை இயக்க அது திட்டமிடுகிறது.

இந்த விமானங்கள் 19 முதல் 22 மணி நேரம் வரை நிற்காமல் செல்லும்.

தற்போதைய விமானச் சேவைத் தெரிவுகளைவிட ஏறக்குறைய நான்கு மணி நேரத்தைச் சேமிக்க இவை உதவும்.

இவற்றின் சிறப்பம்சம், பயணிகள் ஒரே பயணத்தில் இருமுறை சூரிய உதயத்தைக் காண்பர்.

இதற்கு ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ350 வகை விமானங்கள் பயன்படுத்தப்படும்.

2026ஆம் ஆண்டு இந்த விமானச் சேவைகள் நடைமுறைக்கு வந்தால், விமானப் போக்குவரத்து வரலாற்றில் அது மைல்கல்லாகக் கருதப்படும்.

சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் விமானச் சேவை, தற்போது உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானச் சேவை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்