தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

80 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க நீர்மூழ்கியின் சிதைவு கண்டுபிடிப்பு

1 mins read
இரண்டாம் உலகப் போரின்போது 79 பேருடன் நீரில் மூழ்கடிக்கப்பட்டது
63029fa7-159b-4427-82bf-97908ca6618f
‘யுஎஸ்எஸ் ஹார்டர்’ நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு. - படம்: அமெரிக்கக் கடற்படை

வாஷிங்டன்: இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க்கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பிறகு தென்சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘யுஎஸ்எஸ் ஹார்டர்’ என்ற அக்கப்பல் எதிரிப்படைகளால் மூழ்கடிக்கப்பட்டது.

பிலிப்பீன்சின் வடக்குத் தீவான லூஸானை ஒட்டிய கடற்பகுதியில் 3,000 அடிக்குக் (914 மீட்டர்) கீழே அந்நீர்மூழ்கியின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.

1944 ஆகஸ்ட் 29ஆம் தேதி 79 பேருடன் ‘ஹார்டர்’ கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது, ‘ஹார்டர்’ நான்கு நாள்களில் மூன்று ஜப்பானியப் போர்க்கப்பல்களை மூழ்கடித்ததாகவும் இரண்டு கப்பல்களைப் பெருஞ்சேதத்திற்கு உள்ளாக்கியதாகவும் அமெரிக்கக் கடற்படையின் வரலாற்று, மரபுடைமைத் தளபத்தியம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்