1,000 கைதிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது

1,000 கைதிகளுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது

1 mins read
09d403c6-f463-4580-b955-7c746e2d9cd2
படம்: SILENTWORLD FOUNDATION -

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கிய ஜப்பானிய கப்பல் ஒன்றின் சிதைவுகளை சனிக்கிழமை (ஏப்ரல் 23) கண்டுபிடித்துள்ளனர்.

மாண்டிவீடியோ மாரு என்ற அந்தக் கப்பல் பிலிப்பீன்ஸ் அருகே சென்றுகொண்டிருந்த போது மூழ்கியது. அதில் கிட்டத்தட்ட 1,000 ஆஸ்திரேலியப் போர் கைதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கப்பல் 1942ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டது. கப்பலுக்குள் போர் கைதிகள் இருந்தது தங்களுக்கு தெரியாது என்று அமெரிக்கா பின்னர் அறிவித்திருந்தது.

கப்பலின் சிதைவுகள் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடைத்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

ஆஸ்திரேலிய வரலாற்றில் அந்தக் கப்பல் சம்பவம் ஒரு மோசமான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 979 ஆஸ்திரேலியர்கள் அதில் இருந்தனர். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என அக்கப்பலில் மொத்தம் 1,060 பேர் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்