தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாத்தா, பாட்டியைக் கொன்றதாகக் கைதுசெய்யப்பட்ட இளையர்

1 mins read
6f5b34cd-f917-47f9-8747-6ef196c02b74
ஆய்ச்சி மாநிலத்தின் டஹாரா பகுதியில் மூத்தோர் இருவர் மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அருகில் உள்ள பகுதிக்குச் செல்லும் வழியை அதிகாரிகள் மூடினர். - படம்: கியோடோ

ஆய்ச்சி - மத்திய ஜப்பானில் சொந்த தாத்தா, பாட்டியைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (மே 10) 16 வயது இளையரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இளையரின் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இல்லத்தில் மாண்ட நிலையில் காணப்பட்டனர்.

ஆய்ச்சி மாநிலத்தில் உள்ள டஹாராவில் உயர்நிலைப் பள்ளி மாணவரான அந்த இளையர் மே 9ஆம் தேதி பின்னிரவு 2 மணியளவில் தமது 75 வயது தாத்தாவைக் கத்தியால் குத்தி கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

இளையரின் 72 வயது பாட்டியும் ரத்த வெள்ளத்தில் மாண்ட நிலையில் காணப்பட்டார். அந்த மூவருடனும் அந்த வீட்டில் மேலும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தமது தாத்தாவைக் கத்தியால் குத்திக் கொன்றதை அந்த இளையர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். இளையரின் பாட்டி மரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.

தாத்தா, பாட்டியின் படுக்கறையில் அவர்கள் இறந்த நிலையில் இருப்பதாக இளையர் சொன்னதை அடுத்து மே 9ஆம் தேதி அதிகாலை 4.40 மணியளவில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் காவல்துறையைத் தொடர்புகொண்டார்.

குறிப்புச் சொற்கள்