தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோழித் துண்டு கொடுத்த இளையர்கள் பிணையில் விடுவிப்பு

2 mins read
5df85a5c-5553-4d34-93d2-2f707ea21d0c
மிச்சம் வைத்த கோழி எலும்புகளை ஆதரவற்ற ஆடவருக்குக் கொடுத்த மூன்று இளையர்கள் இணைவாசிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளாயினர். - படம்: த ஸ்டார்

நெகிரி செம்பிலான்: மலேசியாவில் ஆதரவற்ற ஆடவர் ஒருவருக்குக் கோழித் துண்டு எலும்புகளைக் கொடுத்த மூன்று இளையர்கள் தடுப்புக் காவலிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நண்பர்களான அவர்கள் மூவரும் விசாரணைக்காக ஜோகூர் பாருவிலிருந்து நெகிரி செம்பிலான் நகருக்குக் கொண்டு வரப்பட்டனர் என்று சிரம்பான் துணை ஆணையர் முகமது ஹட்டா செ டின் தெரிவித்தார். அந்த இளையர்களின் வயது 19, 18, 14.

இளையர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இளையர்கள் மூவரும் ஜோகூர் பாருவைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் சம்பவம் தொடர்பில் சிரம்பானில் புகாரளிக்கப்பட்டது என்றார் திரு ஹட்டா.

சமூக ஊடகத்தில் பரவிய காணொளியில் அந்த மூன்று இளையர்களும் விரைவு உணவகம் ஒன்றில் கோழியைச் சாப்பிட்டுவிட்டு அதன் எலும்புத் துண்டுகளைச் சோற்றுப் பொட்டலத்தில் வைத்து நடைபாதையில் படுத்திருந்த வீடில்லாத ஆடவருக்குக் கொடுத்தனர்.

பொட்டலத்தைத் திறந்த ஆடவர் அதிர்ச்சியடைந்தாலும் இளையர்களுக்கு நன்றி கூறினார்.

இணையவாசிகள் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து இளையர்கள் மூவரும் மன்னிப்புக் கேட்டனர்.

பொட்டலத்தை வாங்கிய ஆடவருக்கு அதுபற்றி முன்கூட்டியே தெரியும் என்றும் அவரது சம்மதத்தைப் பெற்ற பிறகே அவர்கள் பொட்டலத்தை அவரிடம் கொடுத்து காணொளியைப் பதிவுசெய்தனர் என்றும் இளையர்கள் குறிப்பிட்டனர்.

காணொளியைப் பதிவுசெய்த பிறகு ஆடவருக்கு அவர்கள் கோழி, சோறு என முழுமையான உணவைக் கொடுத்ததாகவும் கூறினர்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி, மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் சம்பவம் குறித்து இளையர்களிடம் விசாரணை நடத்தியது.

அவர்களின் வாக்குமூலங்கள் ஜோகூரில் உள்ள இஸ்கந்தர் புத்திரி காவல்துறை தலைமையகத்தில் பதிவுசெய்யப்பட்டன.

ஆணையம் மூன்று தொலைபேசிகளையும் சிம் அட்டைகளையும் இளையர்களிடமிருந்து பறிமுதல் செய்தது.

குறிப்புச் சொற்கள்