காணொளி தளமான யூடியூபின் சேவையில் தடங்கல் ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டுள்ளது.
தடங்கல் காரணமாக யூடியூப் செயலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தமுடியாமல் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தடுமாறினர்.
நேற்று (பிப்ரவரி-27) மதியம் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாகவும் 12,000-க்கு அதிகமானோர் அது குறித்து புகார் கொடுத்ததாகவும் இணையப்பக்கத்தைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் தெரிவித்தது.
யூடியூப் செயலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளில் ஏற்பட்ட தடங்கல் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் அதன் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.