விமானத்தை மோதிச் சிதைத்த யூடியூப் தயாரிப்பாளருக்குச் சிறை

விமானத்தை மோதிச் சிதைத்த யூடியூப் தயாரிப்பாளருக்குச் சிறை

1 mins read
22100777-8d29-49c0-82fd-02c03408f453
படம்: யூடியூப் -

லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா வட்டாரத்தில் 2021ஆம் ஆண்டு நவம்பரில் தனது விமானம் விழுந்து நொறுங்கியதாக யூடியூபில் காணொளி வெளியிட்டார் விமானி டிரெவர் ஜேக்கப்.

லாஸ் பெட்ரஸ் தேசிய வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய வேளையில் வான்குடை மூலம் அவர் தப்பித்தார்.

தனது யூடியூப் ஒளிவழிக்குப் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அவர் திட்டமிட்டு விமானத்தை மோதிச் சிதைத்தது தெரியவந்ததை அடுத்து டிரவெருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அவரது காணொளியை ஏறத்தாழ மூன்று மில்லியன் பேர் பார்வையிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காயூடியூப்