தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரண தண்டனையை நீக்கிய ஸிம்பாப்வே

1 mins read
4cf0345c-f3c0-4c4c-abc8-3cfa8196d81a
உலகில் 113 நாடுகள் முழுமையாக மரண தண்டனைகளை நீக்கியுள்ளன.  - படம்: பிக்சாபே

ஹராரே: ஸிம்பாப்வே அதிபர் எமர்சன் முனங்காக்வா, தம் நாட்டில் மரண தண்டனையை நீக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் ஸிம்பாப்வேயில் மரண தண்டனைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிபர் எமர்சனின் நடவடிக்கைக்கு அம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தச் சட்டத்தை நெருக்கடி காலங்களில் நீக்காமல் இருக்க வேண்டும் என்று அவை கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் ஸிம்பாப்வேயின் நாடாளுமன்றத்தில் மரண தண்டனைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சாதகமான முடிவுகள் வெளியானதையடுத்து அதிபர் எமர்சன் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஸிம்பாப்வேயில் கடைசியாக 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். இருப்பினும், கடுமையான தண்டனை செய்தவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வந்தது.

2023ஆம் ஆண்டின் முடிவில் ஸிம்பாப்வேயில் கிட்டத்தட்ட 60 பேர் மரண தண்டனையை நிறைவேற்றும் வரிசையில் இருந்ததாகத் தரவுகள் கூறுகின்றன.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு வேறு தண்டனைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸிம்பாப்வேயை பிரிட்டி‌ஷ் ஆட்சி செய்தபோது மரண தண்டனைகள் அமல்படுத்தப்பட்டன.

உலகில் 113 நாடுகள் முழுமையாக மரண தண்டனைகளை நீக்கியுள்ளன.

2023ஆம் ஆண்டில் சீனா, ஈரான், சவுதி அரேபியா, சோமாலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்