தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் சிங்கம் தாக்கி விலங்கியல் தோட்ட ஊழியர் உயிரிழப்பு

1 mins read
7b7956e0-9bcc-4d12-9801-8c6e1ab223c8
ஜப்பானின் ஃபுக்குஷிமா பகுதியில் உள்ள தோவோக் சஃபாரி விலங்கியல் தோட்டத்தில் சிங்கங்கள் காணப்படுகின்றன. - படம்: ஃபேஸ்புக்/ தோவோக் சஃபாரி பூங்கா

தோக்கியோ: ஜப்பானின் ஃபுக்குஷிமா பகுதியில் உள்ள தோவோக் சஃபாரி விலங்கியல் தோட்டத்தில் சிங்கம் தாக்கி தோட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அந்நாட்டுக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அந்த விலங்கியல் தோட்ட ஊழியர் பெயர் கெனிச்சி கட்டோ. அவரின் வயது 53.

கட்டோ வியாழக்கிழமை பிற்பகல் சிங்கத்தைக் கூண்டுக்குள் கொண்டு செல்ல முயன்றபோது அவரை அது தாக்கியதாகவும் அவர் கூண்டுக்குள் கழுத்தில் ரத்தம் கசிந்தபடி சுயநினைவின்றிக் கிடந்ததாகவும் அந்நாட்டுக் காவல்துறைப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கட்டாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்விலங்கியல் தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்