அழகானது; ஆழமானது; மாறாதது

அழகானது; ஆழமானது; மாறாதது

3 mins read

அன்பு. அதை உணர்­வ­தி­லும் இன்­பம், தரு­வ­தி­லும் இன்­பம். அத்­த­கைய மகத்­தான தன்­மை­யு­டைய அன்பு, எல்­லோ­ரி­டத்­தி­லும் நமக்கு ஏற்­ப­டு­வ­தில்லை. அவ்­வாறு ஏற்­ப­டும்­போது ஒவ்­வொரு தின­மும் நம் மனம் அவ­ரைப் பற்றி நினைப்­ப­தில் தொடங்கி அவ­ரைப் பற்றி நினைப்­ப­தி­லேயே முடி­ந்துவிடும்.

நாளை அன்­பர் தினம் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. காத­லர்­கள், நண்­பர்­கள், குடும்ப உறுப்­பி­னர்­கள் என வெவ்­வேறு உற­வு­கள் கொண்­டா­டும் ஒரு சிறப்பை இந்தத் தினம் கொண்­டுள்­ளது. இருப்­பி­னும், ஒவ்­வொ­ரு­வ­ரும் வெவ்­வேறு வழி­களில் தங்­க­ளின் அன்பை வெளிப்­ப­டுத்­தக் காண­லாம்.

பொது­வாக ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அன்­ப­ளிப்­பு­கள் கொடுத்­துக் கொண்­டா­லும் ஐந்து வழி­களில் தங்­க­ளின் அன்பை மனி­தர்­கள் வெளிப்­ப­டுத்­த­லாம் என்று அமெ­ரிக்க எழுத்­தா­ளர் கேரி சாப்­மென் தாம் எழு­திய புத்­த­கம் ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார். ஒன்­றாக நேரத்­தைச் செல­வி­டு­வது, தொடு­வது, இனிக்கும் வார்த்­தை­களால் உறு­தி­ய­ளிப்­பது, தேவை­யைப் புரிந்­து­கொண்டு அக்­கறை காட்­டு­வது, அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கு­வது ஆகி­ய­வையே அந்த ஐந்து வழி­கள் என்­றார்.

அதற்­கேற்ப தனக்­குப் பணிச்­சுமை அதி­க­மாக இருந்­தா­லும் காத­லிக்கு நேரத்தை ஒதுக்­கு­வதே அன்­பின் வெளிப்­பாடு என்­றார் 28 வயது சத்யா. தன் காத­லியை விரை­வில் மணந்­து­கொள்ள இருக்­கும் இவர், இரு­வ­ரும் இணைந்து அதிக நேரத்­தைச் செல­வி­டும் வகை­யில் தங்­க­ளின் சந்­திப்­பு­களை எப்­போ­தும் திட்­ட­மி­டு­வ­தா­கச் சொன்­னார்.

ஊக்­க­மும் உறு­தி­யும் அளிக்­கும் சொற்­க­ளைப் பரி­மாறிக்­கொள்­வ­தும் கைகோர்த்து நடப்­ப­தும் தங்­க­ளுக்கு இடையே உள்ள அன்பை உறுதிப்­ப­டுத்­து­வதாக­வும் அவர் கூறி­னார்.

அன்­பர் தினத்­துக்கு ஆண்­டு­தோறும் தன் காத­லிக்­குத் தெரி­யா­மல் திட்­ட­மிட்டு அவரை வெளியே அழைத்­துச் செல்­வது இவ­ருக்கு வழக்­க­மா­கும். அதோடு காத­லிக்­குப் பிடித்­த­மான பொருள்­களை அன்­பளிப்­பா­கக் கொடுத்­தும் இவர் தன் அன்பை வெளிப்­ப­டுத்­து­வ­துண்டு. இவ்­வாறு செய்­யும்­போது காதலி முகத்­தில் தெரி­யும் மகிழ்ச்­சி­யும் ஆச்­ச­ரி­ய­மும் தனக்கு மன­நி­றை­வைத் தரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

காதல் என்­பது மகிழ்ச்சி அளிக்­கும் ஓர் உணர்வு என்­றார் அவர். அன்­புக்­குரி­ய­வ­ரு­டன் இருக்­கும்­போது நேரம் போவதே தெரி­யாது என்­றார். திரு­மண ஏற்­பாட்­டில் தற்­போது ஈடு­பட்­டி­ருக்­கும் இவர்­கள், நாளைய அன்­பர் தினத்­தில் ஒன்­றாக நேரத்­தைச் செல­வி­டு­வதை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக சத்யா பகிர்ந்­து­கொண்­டார்.

பல்­க­லைக்­க­ழக மாணவி சங்­கீதா தம்­மு­டைய அன்­புக்­கு­ரி­ய­வ­ருக்கு அன்­ப­ளிப்­பு­கள் மட்­டு­மன்றி கடி­தங்­கள் எழு­தி­யும் தரு­வ­தா­கக் கூறி­னார்.

நண்­பர்­களும் குடும்­பத்­தி­ன­ரும் துவண்டு போகும் நேரங்­களில் அவர்­க­ளுக்­குத் துணை நின்று உத­வு­வ­தன் மூல­மும் ஒரு­வர் மீது இருக்­கும் அன்­பைக் காட்­டலாம் என்­றார் சங்­கீதா. தான் அன்பு கொண்­டோர் எத்­த­ரு­ணத்­தி­லும் தனி­மையை உண­ரக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு எப்­பொ­ழு­தும் போல நண்­பர்­க­ளு­டன் உணவு உண்டு அன்­பர் தினத்­தைக் கொண்­டாட இருக்­கிறார் சங்­கீதா.

அன்­புக்­கு­ரி­ய­வர்­களு­டன் கடற்­கரை மண­லில் பாதங்­கள் புதை­யும் வண்­ணம் நடந்து செல்­வ­தில் ஓர் அலாதி இன்­பம் சில­ருக்கு உண்டு. கடற்­கரை, பூங்கா போன்ற இடங்­களுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளு­டன் சென்று நேரம் செல­வி­டு­வதை அன்­பின் வெளிப்­பாட்டு மொழி­யாக பல்­க­லைக்­கழக மாண­வர் சஞ்­சித் கரு­து­வ­தா­கக் கூறி­னார்.

தம்­மு­டைய காத­ல­ரின் தேவை அறிந்து உதவி செய்­வதே அன்பை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி என்று கவி பகிர்ந்­து­கொண்­டார். வேலை­கள் அதி­கம் இருக்­கும்­போது தேநீர் கலக்­கிக் கொடுப்­பது, பணி­யில் முடிந்­த­வரை உத­விக்­க­ரம் நீட்­டு­வது போன்ற வழி­களில் ஒரு­வ­ரது சுமை தெரி­யாது ஆறு­தல் அளிக்­க­லாம், அக்­கறை காட்­ட­லாம் என்று இவர் குறிப்­பிட்­டார்.

வாழ்க்கை முழுக்க ஒரு­வ­ருக்­குத் துணை­யாக இருக்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்து, அவ­ரு­டனே வாழ்க்­கை­யில் முன்­னேற வேண்­டும் என்று நாம் செய்­யும் செயல்­கள், அன்­பைக் குறிக்­கின்­றன என்று கூறி­னார் கவி. அன்­பர் தினத்தை மட்­டும் சிறப்­பித்­துக் கொண்­டா­டு­வ­தில்லை என்று கூறிய கவி, அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் செல­வி­டும் ஒவ்­வொரு நாளுமே தனித்­து­வ­மா­னது என்று தெரி­வித்­தார்.

முதல்­மு­றை­யாக இவ்­வாண்டு அன்­பர் தினத்­தைத் தன் காத­ல­ரு­டன் கொண்­டாட உள்­ளார் மாணவி ஷ்ரேயா, 19. தேசிய சேவை புரி­யும் தன் காத­ல­ரு­டன் அதிக நேரம் செல­விட முடி­யா­மல் போன­தால் ஒன்­றாக நேரம் செல­வி­டு­வ­தைத் தான் விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.

ஒன்­றாக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தன் மூல­மும் ஒன்­றாக அமர்ந்து உரை­யா­டு­வது மூல­மும் தன் அன்பை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கச் சொன்­னார் ஷ்ரேயா. காத­லும் அன்­பும் நெருங்­கி­ய­வர்­கள் முகத்­தில் தோன்­றும் சிரிப்­பில் உள்­ளது என்று நம்­பும் இவர், தன் தோழி­க­ளு­டன் அன்­பர் தினத்­தைக் கொண்­டா­டு­வதை இதற்கு முன்பு வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.

ஒரு­வர் தன் அன்பை வெளிப்­ப­டுத்­தும் வழி காலப்­போக்­கில் மாறி­னா­லும் தான் கொண்­டுள்ள அன்பு மாறு­வதில்லை என்­பது அன்­பு­கொண்ட மனங்­க­ளின் நம்­பிக்கையாக உள்ளது.