இளம் தலைவர்களை உருவாக்க உதவிய பயிற்சிப் பயிலரங்கு

இளம் தலைவர்களை உருவாக்க உதவிய பயிற்சிப் பயிலரங்கு

2 mins read

இளம் தலை­வர்­களை உரு­வாக்­கும் நோக்­கில் அண்­மை­யில் சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்டு சங்­கம் 'தி ஃபெசிலி­டேட்­டர்ஸ் நெக்­ஸஸ்' (டிஎ­ஃப்­என்) என்ற பயிற்­சிப் பயி­ல­ரங்கை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இளை­யர்­க­ளின் தலை­மைத்­துவ பண்­பு­க­ளை­யும் திறன்­க­ளை­யும் வளர்த்து அவர்­கள் குழு­வா­கச் செயல்­பட உத­வும் நோக்­கில் இப்­ப­யி­ல­ரங்கு அமைந்­தது. கடந்த மாதம் 26ஆம் தேதி­யன்று நடை­பெற்ற இப்­ப­யி­ல­ரங்­கில் 20க்கும் மேற்­பட்ட இளை­யர்­கள் பங்­கேற்று பய­ன­டைந்­த­னர். சுவா­ர­சி­யம் குறையா வண்­ணம் இளை­யர்­களே பயி­ல­ரங்கை வழி­ந­டத்­தி­னர்.

பங்­கேற்­பா­ளர்­கள் தங்­க­ளு­டைய பலம், பல­வீ­னத்தை ஆராய்ந்­த­னர். குழு­வா­கச் செயல்­ப­டு­வ­தன் பயன்­களும் சவால்­களும் விளக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களும் பயி­ல­ரங்­கில் இடம்­பெற்­றன. இளை­யர்­கள் குழு­வா­க­வும் சுய­மா­க­வும் பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுப் பரி­சு­களும் வென்­ற­னர்.

இப்­ப­யி­ல­ரங்கை வழி­ந­டத்­திய இளை­யர்­களில் ஒரு­வ­ரான 26 வயது ரஸ்­வீன் கவுர், "நான் கற்­றுக்­கொ­டுத்­த­தை­விட கற்­றுக்­கொண்­ட­து­தான் அதி­கம் என்­பேன்.

"நண்­பர்­க­ளு­டன் நடந்த கேள்வி பதில் அங்­கத்­தில் என்­னைச் சிந்­திக்க வைத்து, என்­னுள் ஆர்­வத்­தை­யும் தேட­லை­யும் தூண்­டும் வகை­யில் கேள்­வி­கள் அமைந்­தன. தொடர்ந்து இது­போன்ற பயி­ல­ரங்­கு­களில் கலந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்," என்று கூறி­னார்.

"நண்­பர்­க­ளு­டன் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்­டது புது அனு­ப­வ­மாக இருந்­தது. நம்­மு­டைய பலத்தை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் அதே சம­யம் பல­வீனத்­தை­யும் கருத்­தில் கொண்டு ஆராய்­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­தேன். எதிர்­கா­லத்­தில் ஒரு சிறந்த தலை­வ­ராக உரு­வெ­டுக்­கும் ஊக்­கம் இப்­ப­யிற்­சி­யின் மூலம் எனக்­குக் கிடைத்­துள்­ளது," என்­றார் தொடக்­கக் கல்­லூரி மாண­வி­யான 18 வயது ரச்­சனா பாண்­டி­யன்.

இவ­ரைப்­போ­லவே இப்­ப­யிற்­சிப் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட 23 வயது சிவாய சுப்­பி­ர­ம­ணி­யம், "வகுப்­ப­றை­யில் பாடம் கற்­பது போல் இல்­லா­மல் இந்­தப் பயி­ல­ரங்கு புது­மை­யாக அமைந்­தது. இளை­யர்­கள் இதை வழி­ந­டத்­தி­ய­தால் மன­தில் தோன்­றிய சந்­தே­கங்­களை நண்­பர்­க­ளி­டம் கேட்­பது­போல் தயக்­க­மின்றி வெளிப்­ப­டை­யா­கக் கேட்டு தெளி­வு­பெற முடிந்­தது," என்று கூறி­னார்.