மேன்மேலும் சாதனை புரியும் வேட்கை

மேன்மேலும் சாதனை புரியும் வேட்கை

2 mins read

மாண­வர்­க­ளின் உழைப்பை அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக அண்­மை­யில் யேல்-என்­யு­எஸ் கல்­லூரி மாண­வர்­க­ளின் பட்­ட­ம­ளிப்பு விழா நடை­பெற்­றது. கடந்த 12ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கலா­சார மையத்­தில் நடந்த பட்­ட­ம­ளிப்பு விழா­வில் 14 பட்­டப்­ப­டிப்­பு­க­ளைப் பிர­தி­நி­தித்து 250 மாண­வர்­கள் பட்­டம் பெற்­ற­னர். இந்த 250 மாண­வர்­க­ளுள் 189 மாண­வர்­கள் இளங்­கலை ஹானர்ஸ் பட்­ட­மும் 61 மாண­வர்­கள் இள­நிலை ஹானர்ஸ் பட்­ட­மும் பெற்­ற­னர்.

யேல்-என்­யு­எஸ், டியுக்-என்­யு­எஸ் ஆகி­ய­வற்­றின் தாராளமயக் கலை­கள் (liberal arts), மருத்­து­வக் கல்­விப் பாதை­யில் சென்று மானு­ட­வி­யல் துறை­யில் இளங்­கலை ஹானர்ஸ் பட்­டக்­கல்­வியை முடித்­த­வர் ஐயப்­பன் மது­மிதா, 23.

"மருத்­து­வத்­திற்­கும் மானு­ட­வி­ய­லுக்­கும் என்ன ஒற்­றுமை உள்­ளது எனப் பலர் யோசிப்­ப­துண்டு. மானு­ட­வி­ய­லின் மூலம் நோய்­கள், மருத்­து­வ­மு­றை­க­ளின் சமூ­கக் கண்­ணோட்­டம், கார­ணி­கள் ஆகி­ய­வற்றை அறிந்­து­கொள்­வ­தால் மருத்­து­வத் துறைக்­குக் கை­கொ­டுக்­கிறது," என்று மது­மிதா கூறி­னார்.

மேலும், 'யூகேர்' என்ற மாண­வர் தலை­மை­யி­லான இயக்­கத்தை வழி­ந­டத்தி அதை­ய­டுத்து '2022 குளோபல் இனோ­வே­ஷன் லேப்'பில் கலந்­து­கொண்­டார் இவர். இதன் மூலம் மன­ந­லம் சார்ந்த சவால்­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தோடு அவற்­றுக்­கான தீர்­வு­களைக் கண்­ட­றி­ய­வும் விரும்­பு­கிறார் மது­மிதா.

"மானு­ட­வி­யல் பயின்ற பின் இந்த உலகம் குறித்த எனது பார்வை மாறி­யுள்­ளது. ஒவ்­வொ­ரு­வரும் கொண்­டுள்ள வெவ்­வேறு அடை­யா­ளங்­க­ளைப் பற்றி தெரிந்து­கொள்ள முடிந்­தது," என்று இவர் கூறி­னார். இதை­ய­டுத்து, டியுக்-என்­யு­எஸின் மருத்­து­வக் கல்­வித் திட்­டத்­தில் பயி­ல­வி­ருக்­கி­றார் மது­மிதா.

இரட்டை இளங்­க­லைப் பட்­டக்­கல்­வி­யாக சட்ட ஹானர்ஸ் பட்­டக்­கல்­வி­யோடு பொரு­ளி­யல் இளங்­கலை ஹானர்ஸ் பட்­டக்­கல்வி மேற்­கொண்­டார் ஷஃப்ரீன் பாத்­திமா பிந்தி அப்­துல் நசீர், 24.

தொழில்­நுட்­பத்தில் ஆர்­வம் கொண்ட இவர், '2019 யேல் உயிர் அற­வி­யல் சம்­மர் கழ­கம்' என்ற ஏழு வார திட்­டத்­தில் கலந்­து­கொண்­டார். எச்­ஐவி கிரு­மி­யைப் பற்றி ஆராய்ந்து தனது கண்­டு­பி­டிப்­பு­களை போர்ச்­சு­க­லின் உலக உயிர் அற­வி­யல் மாநாட்­டில் பகிர்ந்­தும் இருந்­தார்.

"எனது சட்­டப் படிப்பை ஒரு பொரு­ளா­தார கண்­ணோட்­டத்­து­டன் காண முடிந்­தது. கல்­லூ­ரிப் பேரா­சி­ரி­யர்­க­ளின் ஆத­ர­வோடு நான் இப்­பட்­டக்­கல்­வி­யின் மீது கொண்ட ஆர்­வம் அதி­க­ரித்­தது. எனது வருங்­கால பணி­யைத் தொடங்­கும்­போது இவ்­விரு வகை­யான பகுப்­பாய்வு சிந்­த­னை­க­ளை­யும் பயன்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்," என்று ஷஃப்ரீன் கூறி­னார்.

ஆல்ட்­மேன் சோல­னின் லண்­டன் அலு­வ­ல­கத்­தில் தொழில்­நுட்ப, ஊடக, தொலைத்­தொ­டர்பு ஆய்­வா­ள­ராக பணி புரி­ய­வி­ருக்­கி­றார் ஷஃப்ரீன்.