பல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி

2 mins read
ddcf088f-a1e1-447a-95a4-e93a7127f306
-
multi-img1 of 3

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல் இந்தியர் அல்லாத மாணவர்களும் தீபாவளிப் பண் டிகையை அக்டோபர் 31ஆம் தேதியே தங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடி மகிழ்ந் தனர். இவ்வாண்டு என்டியு தமிழ் இலக்கிய மன்றம் என்டியுவின் சீக்கிய மன்றம் மற்றும் பட்டதாரி மாணவர்கள் கழகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை, மருதாணி இடுவது, பல்லாங்குழி விளை யாடுவது போன்ற பல்வேறு கலா சார நடவடிக்கைகளைக் கொண்ட தீபாவளி கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 6.30 முதல் 8.30 மணி வரை என்டியுவின் 'லீ கொங் சியான்' விரிவுரை அரங் கில் கலைவிழா ஒன்றும் நடை பெற்றது. நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந் தினராக என்டியு பேராசிரியரும் என்டியுவின் தலைவருமான திரு சுப்ரா சுரேஷ் வருகை தந்திருந்தார். தீபாவளி கொண்டாடப்படு வதன் காரணத்தை உணர்த்தும் வகையில் நரகாசுரனை மையமாகக் கொண்டு ஒரு நாடகம் இந்தக் கலைவிழாவில் மேடையேற்றப் பட்டது.

என்டியு தமிழ் இலக்கிய மன் றத்தின் இசைப் பிரிவு புகழ்பெற்ற பாடல்களை ஒரு கோர்வையாகப் படைத்து, பார்வையாளர்களை மகிழ்வித்தது. மேலும், அம்மன்றத்தின் நடனப் பிரிவு அனைவரின் மனம் கவரும் வண்ணம் ஒரு குத்து ஆட் டத்தையும் 'கற்பா' என்ற ஒரு பிரபல குஜராத்திய நடன வகை யையும் ஆடிப் பரவசப்படுத்தியது. அறுசுவை உணவு விருந்தோடு இக்கலை நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சியில் பல இனங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட என்டியு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தி: ஏஆர் சுப்பு அடைக்கல வன் (என்டியு-டிஎல்எஸ் தலைவர்). படங்கள்: எர்பென் ஷட்டர்ஸ்