இளம் குறும்பட இயக்குநரின் புதுமை முயற்சி

இளம் குறும்பட இயக்குநரின் புதுமை முயற்சி

1 mins read
51db33d8-1d8c-4aa8-b674-c3644c209954
-

'ஹேப்பி ஹோம்' (Happy Home) என்ற தலைப்­பி­லான ஐந்து நிமி­டத் தமிழ் குறும்­ப­டம், நாளை 'பிரேம் ஸ்டார்ஸ்' யூடி­யூப் சேன­லில் வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் கால­கட்­டத்­தில் அனை­வ­ரும் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடந்­த­போது பல­ரது மன­நிலை­யும் பாதிக்­கப்­பட்­டது.

குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் மூடப்­பட்ட நிலை­யில் பெற்­றோர் வீட்­டி­லி­ருந்து தங்­க­ளின் வேலை­யைப் பார்த்­துக்­கொண்டே பிள்­ளை­க­ளை­யும் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

"குடும்ப வாழ்க்கை, வேலை­வாய்ப்பு, பிள்­ளை­க­ளின் கற்­றல் ஆகி­ய­வற்­றில் கொவிட்-19 ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்­பு­களை ஒரு மூன்று வயது சிறு­வ­னின் கண்­ணோட்­டத்­தில் புது­மை­யா­கக் காட்­டி­யுள்­ளது இக்­கு­றும்­ப­டம்," என்று குறும்­ப­டத்தை இயக்­கிய அபி­ஜித்­தன் ஜெய­சோதி, 32, கூறி­னார்.

குடும்ப வாழ்க்கை, சமூக, உள­வி­யல் தாக்­கம் ஆகி­ய­வற்­றைக் காட்­டி­லும் பொரு­ளா­தார, மருத்­து­வத் துறை­யில் ஏற்­பட்ட தாக்­கம் அதி­கம்.

இது அதி­கம் ஆரா­யப்­ப­டாத நிலை­யில், அப்­பி­ரச்­சி­னையை வெளிச்­சம் போட்­டுக் காட்­ட­வுள்­ளது இக்­கு­றும்­ப­டம்.

குறும்­ப­டத்­துக்­கான புகைப்­படப் பணி­கள், எடிட்­டிங், மின்­னி­லக்­கப் பணி­கள் ஆகி­ய­வற்­றுக்கு நட்­சத்­தி­ரம் பிரேம் குமார், 35, பொறுப்­பேற்­றி­ருந்­தார்.

மூன்று வய­துச் சிறு­வன் ஆத்­யு­கன் அபி­ஜித்­தன் இக் குறும்­ப­டத்­தில் நடித்­துள்­ளார். இவர் பல அனைத்துலக திரைப்­பட விழாக்­களில் சிறந்த இளம் நடி­க­ருக்­கான விரு­தை­யும் சிறப்பு அங்­கீ­கா­ரத்­தை­யும் பெற்­றுள்­ளார்.

'ஹேப்பி ஹோம்' குறும்­ப­டத்­திற்கு இது­வரை 10 அனைத்­து­ல­கத் திரைப்­பட விழாக்­களில் நிய­ம­னம் கிடைத்­துள்­ளது.

இக்­கு­றும்­ப­டத்­தைக் காண விரும்­பு­வோர், https://youtu.be/0CU3kjRxEAw என்ற இணைப்பை நாட­லாம்.

செய்தி: கரு­ணா­நிதி துர்கா