புதிய ஆண்டில் கனவுகளும் இலக்குகளும்

2 mins read
5cc3e71e-6a01-4f55-84a9-0f6024ba31a1
வாண வேடிக்கையுடன் புத்தாண்டு வரவேற்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய ஆண்டில் புத்தாண்டு தீர்மானங்கள், இலக்குகளை வகுப்பது காலத்தை நம்பிக்கையோடும் திட்டமிட்டும் செயல்படுத்த உதவுகிறது. ஓர் இலக்கை வைத்து, அதை அடைவதற்கான திட்டத்துடன் செயல்படும்போது எண்ணியது கைகூடுகிறது. கல்வி, வேலை என்று ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் இருக்கும். கனவுகளையும் அவற்றை நனவாக்குவதற்கான திட்டங்களையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றனர் இளையர்கள் சிலர்.

பயணங்கள்

சென்ற ஆண்டு தேசிய சேவை நண்பர்களுடன் நேபாளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 22 அஸ்வின் ஆனந்த், இந்த ஆண்டு சுவாரசியமான பயணங்களுக்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு தரவு அறிவியலும், பொருளியலும் பயின்று வரும் அஸ்வின், புத்தாண்டன்று நண்பர்களுடன் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டார். பயணங்கள் வழி வாழ்க்கையை எளிமையாக வாழக் கற்றுக்கொண்டார் அஸ்வின்.

அஸ்வின் அழகப்பன்.
அஸ்வின் அழகப்பன். - படம்: அஸ்வின் அழகப்பன்

உச்சத் தேர்ச்சி

இந்த ஆண்டு ‘ஏ’ நிலை தேர்வுகளை எழுதவிருக்கும் ரித்திகா குமார், 18, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ரெனெசோன்ஸ் பொறியியல் கல்வியில் பயில இலக்குக் கொண்டுள்ளார். எனவே, ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அவரது முழுக் கவனமும் கல்வியிலேயே இருக்கும்.

ரித்திகா குமார்.
ரித்திகா குமார். - படம்: ரித்திகா குமார்

குடும்ப நேரம்

இந்த ஜனவரியில் தேசிய சேவைக்குச் செல்லவிருக்கும் விக்ரம் கார்த்திகேயன்,18, தன்னால் முடிந்தவரை அதிக நேரம் குடும்பத்துடன் நேரம் செலவிட நினைத்துள்ளார். சென்றாண்டு அடிக்கடி வெளி உணவு சாப்பிட்டதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைய தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு முடிந்தவரை வீட்டில் சாப்பிட முடிவெடுத்துள்ளார். 2025ல் அதிக நூல்கள் படிக்கும் வேண்டும் என்பது இவரது இலக்குகளில் ஒன்று.

விக்ரம் கார்த்திகேயன்.
விக்ரம் கார்த்திகேயன். - படம்: விக்ரம் கார்த்திகேயன்

புதிய வாழ்க்கை

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வந்த 28 வயது ஸ்ரீ ராகேஷுக்கு சிங்கப்பூரில் புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளது. அண்மையில் திருமணம் செய்த ஸ்ரீ ராகேஷ், 2025ல் மனைவியுடன் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஆவலுடன் உள்ளார்.

ஸ்ரீ ராகேஷ்.
ஸ்ரீ ராகேஷ். - படம்: ஸ்ரீ ராகேஷ்

கல்வியில் கவனம்

இந்த ஆண்டு ‘ஓ’ நிலை தேர்வுகள் எழுதவிருக்கும் முகம்மது அபூதாலிப், 16, தொடக்கக்கல்லூரி செல்ல விரும்புகிறார். கல்வியில் அதிக நேரம் செலவிடும் அதேவேளையில், மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க சில சில நடவடிக்கைகளிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். தேர்வுகள் முடிந்ததும் வெளிநாட்டும் பயணம் மேற்கொள் வேண்டும் என்பது இவரது அடுத்த திட்டம்.

முகம்மது அபூதாலிப்.
முகம்மது அபூதாலிப். - படம்: முகம்மது அபூதாலிப்

வருவதை எதிர்கொள்வது

அஞ்சனா மனோகரன், 29, புத்தாண்டுத் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. முன் திட்டம் இன்றி, 2025 முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள நினைத்துள்ளார். ஓர் ஆண்டில் நான்கு நாடுகளைச் சுற்றி பார்க்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ள அஞ்சனா, சேமிப்பதில் முழுக் கவனம் செலுத்தப்போகிறார்.

அஞ்சனா மனோகரன்.
அஞ்சனா மனோகரன். - படம்: அஞ்சனா மனோகரன்
தந்தை கே.ஜோ‌ஷியுடன் ஆதிரா ஜோ‌ஷி.
தந்தை கே.ஜோ‌ஷியுடன் ஆதிரா ஜோ‌ஷி. -
த்ரிஷா ரமே‌ஷ்.
த்ரிஷா ரமே‌ஷ். -
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்