ஆய்­வு: பாதிப்பை ஏற்படுத்தும் 'உருவ அமைப்பு' பற்றிய கண்ணோட்டம்

ஆய்­வு: பாதிப்பை ஏற்படுத்தும் 'உருவ அமைப்பு' பற்றிய கண்ணோட்டம்

1 mins read
05c24ea7-1464-49d8-82b1-7c437f47aad6
-

பெற்றோர் எதிர்­பார்ப்­ப­தற்கு முன்­ன­தா­கவே பிள்ளை­களிடையே உருவ அமைப்பு பற்றிய கண்­ணோட்­டம் ஏற்­பட்­டு­வி­டு­வ­தா­க­வும் ஊட­கங்கள் அவர்­க­ளது கண்­ணோட்­டத்தை பெரிதும் பாதிக்­கின்றன என்றும் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழத்­தில் உள்ள வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளி மேற்­கொண்ட ஆய்­வில் கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. சிங்கப்­பூ­ரில் இளம் வய­தி­லேயே ஊட­கங்களுக்கு பழக்­கப்­பட்­டு­வி­டும் பிள்ளை­கள் தினமும் சரா­ச­ரி­யாக 4.7 மணி நேரத்தை சமூக ஊட­கங்கள் உள்­ளிட்ட ஊடக நட­வ­டிக்கை­களில் செல­வி­டு­வது ஊடக மேம்பாட்டு ஆணையம் மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

பெரும்பா­லான பிள்ளை­கள் அழகு என்­ப­தற்கு மேற்­கத்­திய நாடு­களின் வரை­யறையையே மனதில் கொள்­வ­தாக சிறுவர் மனநல நிபு­ணர்­கள் குறிப்­பி­டு­கின் ற­னர். இது ஆசியப் பிள்ளை­களிடையே எதிர்­மறைத் தாக்­ கத்தை உரு­வாக்­கக்­கூடும் என வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்­ளி­யின் துணைப்பேரா­சி­ரி­யர் மையோஜுங் சுங் கருத்­துரைத் ­துள்­ளார்.