சிரிப்பில் ஆழ்த்திய 'அபாயம்'

சிரிப்பில் ஆழ்த்திய 'அபாயம்'

1 mins read
25ea88f3-7cc4-4a92-a24e-398fef8af8ee
-

ரிப்­பப்­ளிக் பல­துறைத் தொழில் கல்­லூ­ரி­யின் இந்திய கலா­சார மன்றம் 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆண்­டு­தோ­றும் நடத்­தி­வ­ரும் நாடக நிகழ்ச்­சி­யான 'நக்­ஷத்­திரா'வில் இவ்­வாண்டு 'அபாயம்' எனும் நகைச்­சுவை கலந்த மர்ம நாடகம் அரங்­கேற்­றப்­பட்­டது. எழுத்­தி­லி­ருந்து இயக்­கம் வரை இப்­படைப்­பின் ஒவ்வொரு அம்­ச­மும் பள்ளி ஆலோ­ச­கர்­கள், முன்னாள் மாண­வர்­களின் வழி­காட்­டு­த­லின்­படி மாண­வர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டது. இந்­தி­ய கலா­சார மன்றத்­தின் மாணவத் தலை­வ­ரான வினோதினி செல்வம் இயக்­கிய இந்­நா­ட­கம், இம்மாதம் 6ஆம் தேதி பிற்­ப­கல், இரவுக் காட்­சி­கள் மூலம் சுமார் 600 பார்வை­யா­ளர்­களி­டம் நல்ல வர­வேற்பைப் பெற்றது. நாட­கத்­தில் பங்­கெ­டுத்த 63 மாண­வர்­களில் 25 பேர் முன்னாள் மாண­வர்­கள். கதாபாத்­தி­ரங்க­ளாக மட்­டு­மின்றி மேடை பின்புற உதவி, ஒளி விளக்­கு­களை இயக்­கு­வது, ஒலி, மேடை, ஆடை, பல்­லூ­டக நிர்­வா­கம் எனப் பல­த­ரப்­பட்ட பணிகளை மாண­வர்­கள் மேற்­ கொண்ட­னர்.

பயந்ததுபோல் நடித்து சிரிக்க வைத்த கதாபாத்திரங்கள். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி