பார்வை - 2016: சிலப்பதிகாரத்தின் தொடர்பில் குறும்படப் போட்டி, கருத்தரங்கு

பார்வை - 2016: சிலப்பதிகாரத்தின் தொடர்பில் குறும்படப் போட்டி, கருத்தரங்கு

1 mins read
f2317b0a-2f16-44c7-914d-c6e7fd2cbe5f
-

இளை­யர்­களிடையே தமிழ்ப் புழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் விதத்­தில் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கி­யப் பேரவை குறும்ப­டப் போட்டி, கருத்­த­ரங்கு ஆகி­ய­வற்­றுக்கு ஏற்பாடு செய்­துள்­ளது. தமிழின் முதல் முத்­த­மிழ்க் காப்­பி­ய­மா­கக் கரு­தப்­படும் சிலப்­ப­தி­கா­ரத்­தின் தொடர்­பில் குறும் படம், கருத்­த­ரங்­கின் கருத்­து­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. சிங்கப்­பூர் பல­துறைத் தொழிற்­கல்­லூரி, நன்யாங் பல­துறைத் தொழிற்­கல்­லூரி, தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூரி ஆகி­ய­வற்றைச் சேர்ந்த மாண­வர்­கள் 10 நிமி­டங்களுக்­கான குறும்ப­டம் தயா­ரிக்­கும் போட்­டி­யில் பங்­கேற்­க­வுள்­ள­னர்.

ஐம்­பெ­ருங் காப்­பி­யங்கள் பாடத் திட்­டத்­தில் இருந்தா­லும் அவை குறித்த போதுமான வளங்கள் மாண­வர்­களுக்­குக் கிடைப்­ப­தில்லை. எனவே, இந்தப் போட்­டிக்­ கா­கத் தயா­ரிக்­கப்­படும் காணொ­ளி­களை தொடக்­கக்­கல்­லூரி, உயர்­நிலைப்பள்ளி மாண­வர்­களின் தமிழ்ப்­பா­டக் கல்வி வளமாக பயன்­படுத்­திக்­கொள்­ள தயாரிப்புக் குழு கோரிக்கை வைத்துள்­ளது. நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம், சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கம், சிங்கப்­பூர் நிர்­வா­கப் பல்கலைக்கழகம் ஆகி­ய­ வற்றைச் சேர்ந்த மாண­வர்­களுக்­கான கருத்­த­ரங்கு ஒன்­றும் ஏற்பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சிலப்­ப­தி­கா­ரத்­தி­லி­ருந்து ஏதாவது ஒரு கருத்தை மைய­மா­கக் கொண்டு விவாதங்களைப் படைக்­க­வுள்­ள­னர் மாண­வர்­கள்.

இம்­மா­தம் 19ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்­மொழி நிலைய அரங்­கில் காலை 10 மணி முதல் பிற்ப­கல் 12.30 மணிவரை நடை­பெ­ற­வுள்ள 'பார்வை 2016' நிகழ்ச்­சி­யின்­போது மாண­வர்­கள் தங்கள் படைப்­பு­களை பார்­வை யாளர்க­ளிடையே முன்வைப்­பர். மாண­வர்­களின் விவாதத் திறன், குறும்ப­டத்தில் உள்ள கருத்­து­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­படை­யில் சிறந்த குறும்ப­டங்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­படும்.

'பார்வை 2016' நிகழ்ச்சி குறித்த மேல் விவ­ரங்களுக்கு 96650657 என்ற எண்ணில் திரு சர­வ­ணனைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.