நாடகம் வழியாக சமூகப் பணியாற்றும் விஷ்ணுசரன்

நாடகம் வழியாக சமூகப் பணியாற்றும் விஷ்ணுசரன்

1 mins read
93360e2a-26b6-4afa-8ff9-9bc1109b7504
-

நடனம், இசை, நாடகம் ஆகிய கலை­களைக் கற்பிக்கும் வகுப்­பு­கள், மேடை நாட­கங்களுக்கான நுழைவுச் சீட்­டு­கள் போன்றவை மிகவும் விலை­யு­யர்ந்தவை எனக் கருதும் இளை­யர்­களுக்கு மேடை நாடகம் தொடர்பான கலைகளைக் கற்பித்தல், நாடகங்களைக் காணும் அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் மேடை நாடக நிறு­வ­னம் ஒன்று தொடங்கப்­பட்­டுள்ளது. 'பிக் பேர்ட்ஸ் புரொ­டக்­ஷன்ஸ்' எனப்­படும் அந்த மேடை நாடக நிறு­வ­னம், பல இளையர்கள் அத்துறையில் ஈடுபட வழி வகுக்கிறது.

மேடை நாடங்களைத் தயா­ரிப்பதுடன் நாட­கங்களில் மேடையேறி நடிக்­கும் வாய்ப்­பு­களையும் இளை­யர்­களுக்கு அளிக்­கும் இந்த நாடக நிறு­வ­னம், அனு­ப­வம் இல்லாத நடி­கர்­களை­யும் தேர்ந்­தெ­டுத்து அவர்­களுக்கு நாட­கங்களில் நடிக்­கும் திறனை வளர்த்­துக்­கொள்­வதற்­கான பயிற்­சியை­யும் வழங்­கு­கிறது. இவ்வாறு 15 இளம் நடி­கர்­ களுக்­குத் தற்போது பயிற்சி அளித்து வரும் 'பிக் பேர்ட்ஸ் புரொ­டக்­ஷன்ஸ்', தொடங்கப்­பட்ட ஈராண்­டு­களி­லேயே மூன்று நாட­கங்களை வெற்­றிக­ர­மாக மேடை­யேற்றி பலரது பாராட்டை­யும் பெற்­றுள்­ளது.

நாடகம், உளவியல் துறையில் பட்டயக் கல்வி பயிலும் விஷ்ணுசரனுக்கு (வலது) 'முன்மாதிரி மாணவர்' விருதை வழங்கினார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல்வர் டான் சூன் ‌ஷியன். படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி