சமூக அக்கறையுடன் கருத்துப் பரிமாற்றம்

சமூக அக்கறையுடன் கருத்துப் பரிமாற்றம்

1 mins read
73cb2e97-646f-422f-9354-18704cffd9cb
-
multi-img1 of 2

­­வி.அருள் ஓஸ்வின்

இளை­யர்­கள் மனதில்பட்டதை வெளிப்­படை­யாகக் கலந்­துரை­யாடத் தகுந்த சூழலை ஏற்­படுத்­து­வது; மேற்கொள்ளவேண்டிய சமூகத் திட்­டங்கள் பற்றிய கலந்துரையாடல்; இளை­யர்­களின் கருத்தை அர­சி­யல், சமூகத் தலை­வர்­களி­டம் கொண்டுபோய்ச் சேர்ப்­பது போன்ற முக்கிய நோக்கங் களுடன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் தமிழ் இளையர் மாநாடு நடந்து முடிந்துள்ளது. சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை­யின் 37ஆவது செயற்­குழுவின் ஏற்­பாட்­டில் சென்ற மாதம் 23, 24 ஆம் தேதி­களில் 'கிராஸ்­ரூட்ஸ் கிளப்'பில் நடைபெற்ற இம் மாநாட்டில் 16 முதல் 25 வய­திற்கு உட்­பட்ட 150 இளை­யர்­கள், நூற்­றுக்­கும் மேற்­பட்ட பார்வை­யா­ளர்­கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்க விழாவில் சிண்டா­வின் துணைத் தலைவர் விஸ்வா சதா­சி­வன் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­துக்­கொண்டார்.

தமிழ் மொழி, சமூ­கத்­தின் மேம்பாட்­டுக்­கு சமூக, மாணவ அமைப்­பு­கள் கூட்­டு­ற­வு­டன் ஒன்று பட்டுச் செயல்­பட வேண்டும் என்று தமிழ்ப் பேரவையின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தலைமைத்­து­வம், கல்வி, கலை மற்றும் கலா­சா­ரம், சமூக சேவை என நான்கு பிரிவு­களில் இடம்­பெற்ற கலந்­துரை­யா­டல்­கள் தமிழ் இளை­யர்­களின் சிந்தனை­களை வெளிக்­கொணர்ந்தன. வல்­லு­நர்­களிடம் பல சுவா­ர­சி­ய­மான கேள்­வி­களும் எழுப்­பப்­பட்­டன.

மாநாட்டில் சமூக அக்கறையுடன் கூடிய தங்களது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்த இளையர்கள். படங்கள்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை