நித்திஷ் செந்தூர்
திருவிழாக்கோலம் பூண்டிருந்தது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம். பண்பாட்டுக் கூறுகளையும் மரபு சார்ந்த விஷயங்களையும் மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் இம்மாதம் 6ஆம் தேதி மாணவர் தமிழ்த் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம். "மரபுகள் வழி மாணவர்கள் சில முக்கியமான கருத்துகளை உணர்ந்து கொள்ளலாம்.
கோலாட்டம் போன்ற குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஒருங்கிணைந்து செயல்படுதல், குழு உணர்வு, மகிழ்ச்சியாகக் கொண்டாடுதல் போன்ற விழுமியங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம்," என்று உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத் தின் இயக்குநர் அன்பரசு ராஜேந்திரன் கூறினார். பண்பாட்டு நடவடிக்கைகளுடன் 'ஏகேடி கிரியேஷன்ஸ்' படைத்த கிராமிய மணம் கமழும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி ஒன்றையும் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
ஞானசேகரன் லெபக்சி (நடுவில்) கல்வி அமைச்சின் தாய்மொழிகள் பிரிவு இயக்குநர் திரு பாங் சூன் ஹவ்விடமிருந்து உன்னத மாணவருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் அன்பரசு ராஜேந்திரன் (இடக்கோடி) உடனிருந்தார். படங்கள்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

