புதுமுகம் அறிமுகம்

புதுமுகம் அறிமுகம்

2 mins read
9a663202-51f6-4d9a-be11-3c9f144bc349
-

சுதாஸகி ராமன்

புன்­மு­று­வ­லு­டன் 'ஹைஹீல்' கால­ணி­களில் அன்­ன­நடைபோட்டு அழகு ராணி பட்­டத்தை வெல்லும் கனவில் ஆயிரத்துக்கு மேற்­பட்ட இளம் பெண்கள் 'நியூ ஃபேஸ்' அழகு ராணி போட்­டி­யில் இவ்­வாண்டு கலந்து கொண்டனர். ஆண்­டு­தோ­றும் 'தி நியூ பேப்பர்' செய்­தித்­தா­ளால் ஏற்பாடு செய்­யப்­படும் இந்தப் போட்­டி­யில் பெரிய கன­வு­க­ளோடு இம்முறை கலந்­து­கொண்ட­வர்­களில் 17 வயது ஹேமா சந்­தி­ரா­வும் ஒருவர். இம்மாதம் 2ஆம் தேதி மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடந்­தே­றிய இறுதிச் சுற்றில் 'நியூ ஃபேஸ்' பட்­டத்தைப் பெறா­விட்­டா­லும் இறுதிச் சுற்­றுக்­குத் தேர்ந்­தெ­டு­க்கப்­பட்ட 20 அழ­கிகளில் தாமும் ஒருவர் என்­ப­தில் பெருமை­கொள்­கிறார் இவர்.

"பல ஆண்­டு­கள் 'மாடலிங்' அனுபவத்துடன் இப்­போட்­டி­யில் பங்­கேற்றவர்­க­ளோடு அனு­ப­வமே இல்­லாவிட்டாலும் நான் துணிந்து போட்­டி­யிட்­டேன்," என்றார் ஹேமா. அழகிய முகம், கட்டான உடல் போன்ற­ அம்சங்களால் போட்­டி­யில் வெற்றி பெற ஹேமா­விற்கு வாய்ப்பு உள்ளது என எண்ணிய அவ­ருடைய தோழி கேயன், ஹேமாவை இந்தப்­போட்­டி­யில் கலந்துகொள்ளத் தூண்டினார். "என் தோழி சமூக ஊடகங்களில் பதி­வேற்­றம் செய்த என் புகைப்ப­டத்தை நீதி­ப­தி­கள் கண்டு, தேர்வுச் சுற்­று­களில் கலந்­து­கொள்­ளு­மாறு எனக்கு அழைப்பு விடுத்தனர்," என்றார் ஹேமா. 'முயற்சி செய்­து­தான் பார்க்­க­லாமே' என்ற எண்­ணத்­தில் இந்தப் போட்­டி­யின் தேர்வுச் சுற்­று­களில் பங்­கேற்றதாகக் கூறினார் ஹேமா.

போட்­டி­யில் பங்­கேற்­பா­ளர்­கள் எவ்வாறு நடந்­து­கொள்ள வேண்டும், நளி­ன­மாக நடப்­பது எப்படி என்று போட்­டிக்­குத் தேவையான திறன்களைக் கற்­றுக்­கொள்ள பயி­லரங்­கு­கள் நடத்­தப் ­பட்­டன. இவற்­றில் கலந்­து­கொண்டு போட்­டிக்­குத் தயாரான ஹேமா, வீட்­டி­லும் ஒத்­திகை­ பார்த்து வந்தார். பல முறை 'ஹைஹீல்' கால­ணி­களில் நடந்து பழ­ கி­ய­போது அவ­ருடைய தாயார் அளித்த குறிப்­பு­களும் அவருக்கு உதவின. பெற்றோர், நண்­பர்­கள் ஆகி­யோ­ரின் ஆத­ர­வோடு விடாமு­யற்­சி­யு­டன் பயிற்சி செய்த அவ­ருக்கு நாளடை­வில் தன்­னம்­பிக்கை கூடியது. நீ ஆன் பலதுறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வர்த்­தக நிர்­வா­கத் துறையில் முதலாம் ஆண்டு பட்­டயப்­ ப­டிப்பை மேற்­கொள்­கிறார் ஹேமா.

ஜூன் மாதத்­தில் ஆரம்­பித்த 'நியூ ஃபேஸ்' அழகு ராணி போட்­டிக்­கான பயிலரங்கு­கள், ஒத்­திகை­கள் போன்ற­வற்­றில் கலந்­து­கொண்டே தேர்­வு­ களுக்­கும் சிறந்த முறையில் தயாரானார் அவர். "என் தந்தையைப் போலவே வர்த்­த­கத்­ துறை­யில் எதிர்­கா­லத்­தில் பணி­யாற்ற ஆவலோடு இருக்­கி­றேன். இருப்­பி­னும், 'மாடலிங்' துறையில் வாய்ப்­பு­கள் கிடைத்­தால் அவற்றையும் பயன்­படுத்­திக்­ கொள்­வேன்," என்றார் ஹேமா.