பன்முகத் தன்மையை அரவணைப்பதில் தீவிரம் காட்டிய இளையர்கள்

பன்முகத் தன்மையை அரவணைப்பதில் தீவிரம் காட்டிய இளையர்கள்

2 mins read
fdcaac97-270c-49f7-9a94-90e297481783
-

முஹம்­மது ஃபைரோஸ்

பல இனங்கள், பல சம­யங்கள் மதிப்புடன் வாழும் சிங்கப்­பூ­ரில் பல்வேறு சமூ­கத்­தி­ன­ரிடையே நல்­லி­ணக்­கத்தைத் தொடர்ந்து வலுப்­படுத்த அர­சாங்க, சமூகத் தரப்­பு­களில் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்றன. இங்­குள்ள உயர்கல்வி நிலை­யங்களில் உள்ளூர் மாண­வர் ­களு­டன் கணி­ச­மான எண்­ணிக்கை­யில் வெளி­நாட்டு மாண­வர்­களும் பயிலும் சூழல் தற்போது சாதா­ர­ண­மா­கி­விட்­டது. இதைக் கருத்­தில் கொண்டு உள்ளூர், வெளி­நாட்டு மாண­வர்­களிடையே புரிந்­து­ணர்வை­யும் தொடர்பை­யும் வலுப்­படுத்­தும் நோக்கில் தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூரி 'பன்­மு­கத்­தன்மை. உள்­ள­டக்­கு­தல். நீங்கள்' (DIY) எனும் நிகழ்ச்­சியை கடந்த ஜூன், செப்­டம்பர் மாதங்களில் நடத்­தி­யது. இதில் பங்­கேற்க சிங்கப்­பூ­ரின் ஜந்து பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களி­லி­ருந்து சுமார் 200 மாண­வர்­கள் பரிந்­துரைக்­கப்­பட் டனர். தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அமைந்­துள்ள 'குளோபல் கனெக்ட் வில்லேஜ்'ஜில் இரண்டு நாட்கள் தங்­கி­யி­ருந்து அங்கு ஏற்பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பயில­ரங்­கு­கள், சமூகத் திட்­டங்கள் போன்ற பயிற்சி அங்கங்களில் அவர்கள் கலந்து கொண்ட­னர்.

பயிற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நன்யாங் பல­துறைத் தொழிற்கல்­லூரி மாணவி நந்தினி மதி­வா­ணன், 18. பயிற்சிகளில் பங்­கேற்­ற­தன் மூலம் பிற கலா­சா­ரங்களைப் பற்றிய விழிப்­பு­ணர்­வும் புரி­த­லும் அதி­க­ரித்­த­தாகக் கூறிய நந்தினி, எதையும் தீவிர­மாக ஆரா­யா­மல் ஊகத்­தின் அடிப்­படை­யில் எந்த­வொரு முடி­வுக்­கும் வந்­து­வி­டக் கூடாது என்­பதைக் கற்­றுக்­கொண்ட­தாகத் தெரி­வித்­தார். சமு­தா­யத்­தில் மூத்த ஊழி­யர்­களின் பங்களிப்பை அங்­கீ­க­ரித்து, நன்றி தெரி­விக்­கும் வகையில் நிகழ்ச்­சி­யின் இறுதி அங்க­மாக மூத்த துப்­பு­ர­வா­ளர்­களுக்கு மதிய உணவு பரி­மா­றி­னர் மாண­வர்­கள்.

'பன்­மு­கத்­தன்மை. உள்­ள­டக்­கு­தல். நீங்கள்' எனும் நிகழ்ச்­சி­யின் இறு­தி­ அங்கமாக, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மூத்த துப்­பு­ர­வா­ளர்­களுக்குப் பல­துறைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் மதிய உணவு பரி­மா­றினர். பச்சை டீ=சட்டை அணிந்து நின்றவாறு முதல் மேசையில் உணவு பரிமாறுகிறார் நந்தினி மதி­வா­ணன். படம்: தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி