பிடித்த துறையில் பயின்றதால் பெற்ற வெற்றி

பிடித்த துறையில் பயின்றதால் பெற்ற வெற்றி

1 mins read
06773c5a-b9dc-4cad-bf88-170ac42f7ea4
-

யாஸ்மின் பேகம்

உடல்குறையுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம், திவ்யாவின் தோழி தொழில்வழி சிகிச்சைத் துறையைப் பற்றி கூறியபோது ஏற்பட்டது. அதனால் நன்யாங் பலதுறைத் தொழிற் கல்லூரியில் இத்துறையில் சேர்ந்தார் திவ்யா பாலகிருஷ்ணன்,23. உடற்குறையுள்ளோருக்கு உதவ வேண்டும் என்ற திவ்யாவின் ஆர்வம் அவர் மருத்துவமனைக்கு வேலைப் பயிற்சிக்காகச் சென்றபோது மேலும் வலுவடைந்தது. தமது துறையில் சிறப்பு பெற்ற திவ்யாவிற்கு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தொழில்வழி சிகிச்சைத் துறையில் பட்டப்படிப்பு படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. "நம் வாழ்வில், எந்தத் துறையில் பெரும் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிப்பது மிகவும் முக்கியம். இதைப் பின்பற்றினால் மட்டுமே,அதில் சிறந்து தேர்ச்சியடைய முடியும்" என நம்புகிறார் திவ்யா. திவ்யாவின் இந்த நம்பிக்கைக்கு ஏற்ப, ஆர்வம் உள்ள துறையில் சேர்ந்து படித்ததன் பலனையும் அவர் அடைந்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற இவரது பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தொழில்வழி சிகிச்சை (occupational therapy) துறையில் பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவியாக (Valedictorian) திவ்யா தேர்ச்சி அடைந்தார். மேலும் தமது பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வியில் தாம் பெற்ற வெற்றிக்குத் தமது பெற்றோரின் ஆதரவு மிகவும் உறுதுணையாக இருந்தது என்று திவ்யா குறிப்பிட்டார்.