மீசை வளர்க்கும் 'மொவம்பர்'

மீசை வளர்க்கும் 'மொவம்பர்'

1 mins read
b7786022-18ee-4e99-9cc5-7b4879d7801a
-

ஆண்களிடையே பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்கள், மன நோய் போன்ற கொடிய நோய்களின் தொடர்பிலான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது 'மொவம்பர்' இயக்கம். 2012ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலும் அந்த இயக்கம் பின்பற்றப்படுகிறது. நண்பர் ஒருவர் மூலம் 'மொவம்பர்' பற்றி அறிந்துகொண்ட அம்ரேஷ், 30 அது குறித்து இணையத்தளம் வழியாக மேலும் அறிந்து கொண்டார். ஆண்களின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு நல்கும் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தரும் விதமாக மீசை வளர்க்கும் அம்ரேஷ் அன்பழகன் தமது மீசையைப் பற்றி கேட்பவர்களிடம் இவ்வியக்கம் பற்றி விவரித்து அவர்களையும் பங்களிக்க ஊக்குவிக்கிறார்.