ஊக்கத்தால் உயர்ந்த ஷான்

ஊக்கத்தால் உயர்ந்த ஷான்

1 mins read
78406d41-4d60-46a9-aa88-23e3d752d4b8
-

சுதாஸகி ராமன்

மேடையேறியோ சக மாணவர்கள் முன்னிலையிலோ உரையாற்றுவது, ஒப்படைப்புகளைப் படைப்பது போன்றவற்றைச் செய்வது இயலாத காரியம் என்ற எண்ணத்துடன்தான் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் ஷான் ராஜூ. அங்கு பயின்ற நான்கு ஆண்டுகளில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் அளித்த ஊக்குவிப்பால் இப்போது 16 வயதாகும் ஷானால் பார்வையாளர்களின் முன் தைரியமாகப் பேச முடிகிறது. படிப்பில் சிறந்து விளங்கவும் பள்ளி அவருக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. நேற்று முன்தினம் தமது வழக்க நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட அவர், 8 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தம்மால் கல்வியில் சிறக்க முடியும் எனும் புதுத்தெம்பு பிறந்துள்ளதாக ஷான் கூறினார். வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மாணவர் களுக்கென பிரத்தியேகமாக கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அதன் மாணவர்கள் முதல்முறையாக இவ்வாண்டு வழக்கநிலைத் தேர்வையெழுதி அதற்கான முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.