சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

1 mins read
8536d98d-eab0-4054-a798-698a36232aef
-

அஷ்வினி செல்வராஜ்

வரலாற்றில் முதல்முறையாக, தரைப்பந்தாட்டக் குழு ஒன்றைச் உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிக்கு சிங்கப்பூர் அனுப்பி வைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் காலம் முதல் சிறப்புத் தேவையுடைய பள்ளிகளில் படித்து வந்த கற்றல் குறைபாடுடைய ஷர்வேந்திரன் மோகர்னன், அந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவாது குழு வெள்ளி விருதை வென்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் உடற்பயிற்சி வகுப்புகளின்போதுதான் தரைப் பந்து விளையாட்டைப் பற்றி முதன் முதலாக அறிந்து கொண்டார் ஷர்வேந்திரன் மோர்கனன், 21. நண்பரின் ஊக்குவிப்பின் மூலமாக தரைப்பந்தாட்டக் குழு வில் சேர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தரைப்பந்தாட் டத்தில் ஈடுபட்டு வருகிறார் ஷர்வேந்திரன். கடந்த ஆண்டு மே மாதத்தில் சிறப்புத்தேவை உள்ளோருக்கான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தரைப்பந்து விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடி யதால் சிறப்பு ஒலிம்பிக்ஸ் குழுவில் சேர ஷர்வேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.