தேசிய தமிழ்மொழி பண்பாட்டு முகாமில் புத்தாக்கத்துடன் பாரம்பரியம்

தேசிய தமிழ்மொழி பண்பாட்டு முகாமில் புத்தாக்கத்துடன் பாரம்பரியம்

1 mins read
f27de667-34f7-4a46-89b9-1c2b131dbd93
-

தமிழ்மொழி, கலாசாரம், பாரம் பரிய பண்பு நெறிகளை மாண வர்களிடம் புத்தாக்கம் நிறைந்த முறையில் கொண்டு செல்லும் விதத்தில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் தேசிய தமிழ்மொழி பண்பாட்டு முகாமை நடத்தியுள்ளது. இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த விறுவிறுப் பான முகாமில் 150 மாணவர்கள் ஆர்வத்துடன் மொழி, பாரம் பரியம் சார்ந்த தேடலில் ஈடுபட்டனர். "இக்கால மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமான தொழில் நுட்பம், அவர்களுக்குப் பரிச்சய மில்லாத பாரம்பரியம் ஆகிய இருவேறு கூறுகளை ஒன்றாக இணைத்து கற்றல் விளைவு களாக இந்த முகாமில் கொண்டு வந்தோம்," என்றார் முகாமின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஆசிரியருமான திருமதி.கலாராணி.

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக வெளியீடு கண்ட 'சொல்லிச் செல்லும் சொல்லடை கள்' எனும் நூலை மையமாகக் கொண்டு மாணவர்கள் முதல் அங்கத்தில் ஈடுபட்டனர். வாய்வழி இலக்கியமாக நம்முடன் வலம்வந்த இந்தச் சொல்லடைகள் அனுபவத்தின் அடையாளங்கள் என்பதை உணர்ந்த மாணவர்கள் தங்க ளுடைய பார்வையில் சில சொல்லடைகள் உணர்த்தும் செய்திகளை முன்வைத்தனர். மாணவர்களின் வாழ்வியல் சார்ந்த சிந்தனை பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. புதையல் வேட்டை, மரபுவழிக் கலைகள், கணினியும் கைவண் ணமும், சமையல் அங்கம், விளையாடி மகிழ்வோம் என்ற ஐந்து நடவடிக்கைகள் முகாமில் இடம்பெற்றன.

கபடியில் கைவரிசை காட்டிய மாணவிகள். : படம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்