முதியவர்களுக்கு உதவ விரும்பும் சசிந்திரன்

முதியவர்களுக்கு உதவ விரும்பும் சசிந்திரன்

2 mins read
4f3b3096-6db5-49fc-8729-0c036aade8c0
-

மாதங்கி இளங்கோவன்

வயதானவர்களுக்கு ஏற்படும் 'டிமென்‌ஷியா' எனப்படும் ஒரு வகை ஞாபகமறதி நோயைப் பற்றி கற்றுக்கொண்டு அந்த வியாதி யால் அவதிப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கிறார் சசிந்திரன் தியாகராஜன், 25. இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் நோய்க்கான அறிகுறி களைத் தாமதமாகத்தான் கண்டுபிடிக்க முடிகிறது. இந்தச் சூழ்நிலையை மாற்றியமைத்து முதியோர்களுக்கு ஞாபகமறதி நோயால் ஏற்படும் பாதிப்பின் அளவையும் நோயின் வேகத்தையும் குறைக்க விரும்புகிறார் சசிந்திரன். அண்மையில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் துறையில் பட்டம் பெற்ற சசிந்திரன், அடுத்ததாக டியூக்- என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் படிப்பை மேற்கொள்கிறார்.

பல்கலைக்கழகத்தில் படிப்பில் தொடர்ந்து சிறப்பாகச் செயல் பட்டதோடு மற்ற புறப்பாட நடவடிக் கைகளிலும் ஈடுபட்டு தமது திறன் களை வளர்த்துக் கொண்டார் சசிந்திரன். தமது 'ஏ' நிலை தேர்வுகளில் அவ்வளவு சிறப்பாகச் செய்ய வில்லை என்று எண்ணிய சசிந்திரன், பல்கலைக்கழகத்தில் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தினார். அதன் பயனாக சிறந்த தேர்ச்சி பெற்றதோடு இரண்டு முறை தலைமை ஆசிரியரின் பட்டியலிலும் இடம் பிடித்தார். முதல் ஆண்டில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய அவர், பிறகு நரம்பியல் துறை சார்ந்த இணைப்பாட நடவடிக்கை ஒன்றைத் தொடங்கினார். வெவ்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்களோடு ஒன்று சேர்ந்து இந்த இணைப்பாட நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். அந்தக் குழுவினர் நரம்பியல் துறை பற்றிய பல்வேறு சுவையான, ஆக்கபூர்வமான கலந்துரை யாடல்களை மேற்கொண்டனர்.

தேசியப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் துறையில் பட்டம் பெற்ற சசிந்திரன் தியாகராஜன், ஆங்கிலப் பாடத் துறையில் முனைவர் பட்டம் பெற விரும்பும் பவன் மனோகரன்