தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாட்டுப்புறக் கலைகள் மூலம் கதை

1 mins read
8d626ca2-3f5e-4f19-abc3-9fb33d22a5b4
-

தமிழ் முரசின் பிரம்மாண்ட படைப்பாக 'நாட்டுப் புறக் கலை வளர்க்கும் கதை மரபு' என்ற நிகழ்ச்சி நவம்பர் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு விக்டோரியா அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞரான டாக்டர் பாரதி திருமகனின் வில்லுப்பாட்டு, அவாண்ட் தியேட்டர் நாடகக் குழுவின் 'வீதி நாடகம்', பாஸ்கர் கலைக் கழகத்தின் தெருக்கூத்து ஆகிய அங்கங்கள் மூலமாக தமிழ்ப் பாரம்பரிய கதை சொல்லும் முறையில் சிங்கப்பூர் படைப்புகள் இடம்பெறும். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் $20 மட்டுமே. 'நவீன இசையில் தமிழ்க் கவிதை' நாட்டுப்புறக் கலைகள் மூலம் கதை என்ற நிகழ்ச்சி நவம்பர் 3ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஆர்ட்ஸ் ஹவுஸில் அரங்கேறும். நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம் $10 மட்டுமே. முழுநேர தேசிய சேவையாளர்கள், மாணவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 20% வரை தள்ளுபடி உண்டு. நுழைவுச்சீட்டுகளுக்கு இப்போதே www.sistic. com.sg அல்லது www.peatix.com என்ற இணையத்தளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

நாட்டுப்புறக் கலை வளர்க்கும் கதை மரபு நவம்பர் 4, இரவு 7 மணி விக்டோரியா அரங்கம் நவீன இசையில் தமிழ்க் கவிதை நவம்பர் 3, இரவு 8 மணி ஆர்ட்ஸ் ஹவுஸ்