மின்விளக்கில் இயங்கும் செயலி

மின்விளக்கில் இயங்கும் செயலி

1 mins read
2d9afaa7-26f9-43fa-856f-f21149cc8325
-

வெளிச்சத்தை அளிக்கும் மின்விளக்குகளை வித்தியாசமாகப் பயன்படுத்துவது பற்றி ஃபிலிப்ஸ் மின்னணு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மூன்று தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஏறக்குறைய 1,000 மாணவர்கள் இரவு 10.30 மணிக்கு ஒரே நேரத்தில் விடுதியில் தங்கள் இருப்பைப் பதிவு செய்யும்போது ஏற்படும் நெருக் கடியைத் தவிர்க்க 'மைன்ஸ்பேஸ்' செயலி பற்றிய யோசனையை முன் வைத்தனர். போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட 100 படைப்புகளில் 20 வயது ஜஸ்பிரீத் கோரும் அவருடைய இரு நண்பர் களும் உருவாக்கிய இப்படைப்பு வெற்றிபெற்று, ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஃபிலிப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்து ரையாடும் வாய்ப்பை அவர்களுக்குப் பெற்றுத்தந்தது. இவ்வாண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தின் தலைநகரத் திற்குச் சென்ற அவர்கள், தங்கள் படைப்பை மேம்படுத்துவது பற்றி கற்றுக்கொண்டனர்.

படைப்புக்குச் செயல்வடிவம் கொடுக்க மேலும் நான்கு மாணவர் கள் இத்திட்டத்தில் இணைந்தனர். 23 வயது ரூபன் ஐசக் மஹேந்திரனும் அவருடைய மூன்று குழு உறுப்பினர் களும் செயலியை உருவாக்கி படைப்புக்கு உயிர் கொடுத்தனர். இம்மாத இறுதிக்குள் மாணவர்கள் தங்கள் கைபேசிகளில் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

படத்தில் செயலி குறித்த திட்டத்தை உருவாக்கிய தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர் ஜஸ்பிரீத் கோர் (இடமிருந்து மூன்றாவது), செயலியைத் தயாரித்த ரூபன் ஐசக் மஹேந்திரன் (இடமிருந்து முதலாவது), மற்றும் குழு உறுப்பினர்கள். படம்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி