பாதைகள் பலவிதம்; முயன்றால் வெற்றி நிச்சயம்

பாதைகள் பலவிதம்; முயன்றால் வெற்றி நிச்சயம்

1 mins read
38dca255-a40d-4942-8fec-8c86dbf34e91
-

முஹம்மது ஃபைரோஸ்

தொடக்கம் எவ்வாறாக இருந்தா லும் கடந்து செல்லும் பாதையில் ஒருமுகத்தோடும் தன்னம்பிக்கை யோடும் செயல்பட்டால் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி கிட்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கின்றனர் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் இருவர். வழக்கநிலை (தொழில்நுட்பம்) மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியான கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 'ஐஎஸ்சி' எனப்படும் தொழில்நுட்பக் கல்விக் கழக திறன் சான்றிதழைக் கடந்த ஆண்டு பெற்ற சரண்யா ராமநாதன், இயந்திரப் பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்களில் ஒருவர்.

இயந்திர இயக்க சேவையில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் இவர், இப்போது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (ஐடிஇ) தானியங்கி மோட்டார் வாகனத் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குகிறார்.