புகை கக்கும் எரிமலைக்கு அருகில் கிடைத்த அரிய அனுபவம்

புகை கக்கும் எரிமலைக்கு அருகில் கிடைத்த அரிய அனுபவம்

2 mins read
19982029-db02-470a-a114-c39156c5a64a
-

வில்சன் சைலஸ்

எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தில் சொந்த நாட்டிற்குப் பலரும் திரும்பிச் சென்றுகொண்டிருக்கையில் சாகசங்களை அதிகம் விரும்பும் 31 வயது மோகனன் பாலகிருஷணன், பாலித் தீவில் சுற்றுலாவை நண்பர்களுடன் தொடர்கிறார். இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பாலித் தீவில் விடுமுறையைக் கழிக்க சென்ற மோகனனுக்கு இந்தப் பயணம் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. வரலாற்றில் இடம் பிடித்துள்ள அகுங் எரிமலையின் அண்மைய சீற்றத்தை நேரில் கண்ட அவர், பாலியில் இருந்தவாறு தமது அனுபவத்தைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி பாலித் தீவின் செமின்யாக் சுற்றுலாத் தளத்திற்குச் சென்று அங்குள்ள வில்லா ஒன்றில் தங்கியிருந்த மோகனனுக்கு அகுங் எரிமலையின் சீற்றம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் அதே நாளில் தெரிய வந்தன. வாட்ஸ்அப் மூலம் பெற்றோரும் நண்பர் களும் சிங்கப்பூருக்குத் திரும்பும்படி பலமுறை அறிவுறுத்தியும் சுற்றுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்ய மோகனனுக்கு விருப்பமில்லை. "சீற்றம் அதிகரித்து அகுங் எரிமலை வெடித்துவிட்டால் பாலித் தீவில் முடங்கி விடுவோம் என்ற அச்சத்தில் சுற்றுப் பயணிகள் பலர் தங்கள் சுற்றுலாவைப் பாதியில் நிறுத்திக்கொண்டு தீவை விட்டு வெளியேறினர். வாழ்நாளில் எப்போதாவது தான் இத்தகைய சுவாரசிய தருணம் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து அங்கேயே இருந்துவிட்டேன்," என்றார் அவர்.

பலமுறை வெடித்த அகுங் எரிமலையிலிருந்து வெளிவந்த ஆறிய குழம்பும் சாம்பலும் அருகில் உள்ள ஆற்றில் கலந்து நச்சுத்தன்மையுள்ளதாக மாறிவிட்டது. அகுங் மலைக்குச் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் நின்ற மோகனன். படம்: மோகனன் பாலகிருஷ்ணன்