முஹம்மது ஃபைரோஸ்
முனைப்பு, அர்ப்பணிப்பு உணர் வுடன் செயல்பட்டு பதவி உயர்வு பெற்ற 27 வயது அப்துல் முனாஃப் முஹம்மது ஸுபைர், சக இளையர்களுக்கு முன்னு தாரணமாகத் திகழும் இளையர். மக்கள் கழக 'டீன்ஸ்= நெட்வர்க்' மன்றத்தின் பிடோக் கிளை 2002ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் உறுப்பினராக அவர் சேர்ந்தார். காற்பந்து விளையாட்டாளராக தொடங்கி அணித் தலைவர் பதவிக்கு உயர்ந்து இப்போது காற்பந்து ஆர்வலர் குழுவின் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார். இவர் மன்றத்தின் உறுப்பி னர்களுக்கு காற்பந்து பயிற்சி அளித்து வருகிறார். 'டி=நெட்' என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மன்றத் தின் பிடோக் நிர்வாகக் குழுவில் உதவிச் செயலாளராகப் பதவி வகிக்கும் திரு முனாஃப், தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பிடோக் 'ஸ்த்ரீட்' காற்பந்து போட்டிகளுக்கு ஏற் பாடு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இவரைப் போன்று ஏராளமான இளையர்கள் இத்தனை பொறுப்புகளையும் செவ்வனே மேற்கொள்ள அடித் தளம் அமைத்துத் தந்தது மக்கள் கழகத்தின் 'டி-நெட்' மன்றம்.
'பல்ஸ்! ஸ்போர்ட்ஸ் ஃபியஸ்ட்டா' நிகழ்வின்போது இளையர் ஒருவருடன் அளவளாவும் அப்துல் முனாஃப் (வலது). படம்: மக்கள் கழகம்

