உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் கணிதப் பாடம்தான் முகம்மது நிஸாமுதீன் அப்துல் ரஹ்மாக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்தது. சாதாரண நிலைத் தேர்வில் அவர் சிறந்த தேர்ச்சி பெறவில்லை. அதனால் விரைவு நிலையில் பயின்ற நிஸாமுதீன், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் குறிப்பிட்ட ஒரு சில துறைகளுக்குதான் தகுதி பெற்றார். வர்த்தகத் துறை தொடர்பான பட்டயக் கல்வியையே பயிலலாம் என்று விரும்பிய நிஸாமுதீனின் ஆசை நிறைவேறவில்லை. தனியார் துறையில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு இருந்தது. ஆனால் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்வது குறித்து அவரது தந்தை ஆலோசனை வழங்கினார். தந்தை வழங்கிய ஆலோசனை யின்படி தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் கிழக்கு கல்லூரி வளாகத்தில் இயந்திரப் பொறி யியல் துறைக்கான உயர் நைடெக் பாடத்திட்டத்தில் 2001ஆம் ஆண்டில் சேர்ந்தார் நிஸாமுதீன். "ஏற்கெனவே சாதாரண நிலை தேர்வில் நல்ல தேர்ச்சி பெற வில்லையே என்ற வேதனையில் இருந்தேன். அந்த நிலையில், இனி பொறியியல் கணிதப் பாடத்தையும் கற்கும் சூழ்நிலை ஏற்பட்டபோது ஏமாற்றம் அடைந் தேன்," என்று அன்றைய மன நிலையை நினைவுகூர்ந்தார் நிஸாமுதீன்.
தமது மாணவியிடம் துல்லியப் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தைச் செயல்படுத்தும் முறையை விளக்கும் நிஸாமுதீன் (வலது). படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்

