இசைத் துறையில் முன்னேறக் கிடைத்த அங்கீகாரம்

இசைத் துறையில் முன்னேறக் கிடைத்த அங்கீகாரம்

1 mins read
d41c57dd-1f49-41f1-af2d-5cd93bb119eb
-

முஹம்மது ஃபைரோஸ்

உள்ளூர் இசைத் துறையில் இன்னும் அதிகமான கலை ஞர்கள் முழுநேரமாக இசைப் படைப்புகளை உருவாக்க ஊக்குவித்துவரும் பாடகரும் பாடலாசிரியருமான சுதாசினி ராஜேந்திரனுக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சிங்கப்பூரின் நான்கு அதி காரத்துவ மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பாடக்கூடிய வளர்ந்துவரும் இசைக் கலைஞ ர்களையும் பாடகர்களையும் அங்கீகரிக்கும் வகையில் 'நெக்ஸ்ட்' இசை விருது நிகழ்ச்சி முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பிரிவில் 'சிறந்த வளர்ந்து வரும் கலைஞர்' என்ற விருதை வென்றுள்ளார் இந்த 27 வயது இளையர்.

எட்டு வயது முதலே பல்வேறு சமூக மன்ற, பள்ளி நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய சுதாசினி, 12 வயதில் சிறுவர் பாட்டுத் திறன் போட்டி ஒன்றில் பாடுவதற்காகத் தொலைக்காட்சியில் தோன் றினார்.

முழுநேரமாக இசைத் துறை யில் கால்பதிக்க விரும்பிய சுதாசினிக்கு திறமையை வெளிச் சத்திற்குக் கொண்டு வந்தது 'வசந்தம் ஸ்டார்' 2011ல் இவருக்குச் சூட்டப்பட்ட மகுடம். அந்த வெற்றி பல கதவுகளைத் திறந்தது மட்டுமல்லாமல் இவருக் கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் பெற்றுத்தந்தது.

முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நெக்ஸ்ட்' இசை விருது நிகழ்ச்சியில் தமிழ்ப் பிரிவில் தலைசிறந்த வளர்ந்துவரும் கலைஞர் என்ற விருதை வென்றார் உள்ளூர் பாடகர் சுதாசினி ராஜேந்திரன். படம்: தி ரைஸ் நிறுவனம்