மெரினா பேயில் கேளிக்கைத் திருவிழா

மெரினா பேயில் கேளிக்கைத் திருவிழா

1 mins read
f2ab59d5-c760-4ba1-a34b-8c4462564dc9
-

சுதாஸகி ராமன்

அலுவலங்கள், வங்கிகள் என்று மரினா பே மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த கட்டடங்களுக்கு இடையே களிப்பூட்டும் புதிய கேளிக்கைத் திருவிழா ஒன்று அறிமுகமாகியுள்ளது. 'புருடென்‌ஷியல் மரினா பே கேளிக்கைத் திருவிழா' என்று அழைக்கப்படும் அது, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை செயல்படும். சிங்கப்பூரின் ஆகப் பெரிய தற்காலிக கேளிக்கைத் திருவிழாவான அது, 25,000 சதுரமீட்டார் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி விடுமுறைக் காலத்தில் சிறுவர் முதல் அனைத்து வயதினரும் கலந்து கொண்டு ரசிக்கும் வண்ணம் திறன் விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள் போன்ற நட வடிக்கைகளுடன் சாப்பிடுவதற் குப் பல சிற்றுண்டிக் கடைகளும் திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ளன.

மெரினா பேயில் தொடங்கப்பட்டுள்ள கேளிக்கைத் திருவிழாவில் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் சாகச, திறன் விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. படம்: புரூடென்‌ஷியல் மெரினா பே திருவிழா