வில்சன் சைலஸ்
மகளுக்கு ஏற்பட்ட தீராத தோல் தடிப்பு நோய், இல்லத்தரசியான தாயை எழுத்தாளராக மாற்றியது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை 'எக்ஸீமா' எனும் ஒரு வகை தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டவர் 34 வயது வீணாவின் மகள் மூன்றரை வயது சுஜிதா சேஷன். "லேசாகச் சொரிந்தாலே ரத்தம் கசியத் தொடங்கிவிடும்," என மகளின் மோசமான நிலை பற்றிப் பகிர்ந்துகொண்ட வீணா சுப்பிரமணியம், பிறப்பு முதல் மகளுக்கு ஏற்பட்ட நோயால் தமது வேலையை விட்டுவிட்டு இல்லதரசி ஆனதாக கூறினார்.
பார்க்காத மருத்துவர் இல்லை, எடுக்காத மருந்துகள் இல்லை என்ற வீணா, இரண்டு ஆண்டு களாக உட்கொண்ட மாத்திரை களின் விளைவாக தம் மகளின் தோல் உறுதியிழந்து மெலிதாகத் தொடங்கியது என்றார். 'எக்ஸீமா' நோயைக் குணப் படுத்த முடியாவிட்டாலும் அதை நிச்சயமாகக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர் கள் கூறியது நம்பிக்கை அளிக்கவே, எப்படியாவது மக ளுக்கு உதவும் உறுதியுடன் சமூக ஊடகங்களிலும் உதவி நாடிய வீணாவுக்குக் கடந்த ஆண்டு இறுதியில் பலன் கிடைத்தது. தாய்மார்களுக்கான ஒரு 'வாட்ஸ்அப்' குழுவின் மூலம் 'இசென்ஷலி ஆயில்ஸ்' (Essen tially Oils) என்ற நிறுவனத்தின் இயக்குநர் குமாரி ஃபுளோரன்ஸ் சுவாங்கின் அறிமுகம் வீணா வுக்குக் கிடைத்தது.
கணவர், பிள்ளைகளுடன் வீணா சுப்பிரமணியம். படம்: வீணா

