முகத்தில் சிரிப்பு; அகத்தில் சிறப்பு

முகத்தில் சிரிப்பு; அகத்தில் சிறப்பு

1 mins read
f28571af-5aa3-446e-93d1-83ce0410789d
-

வில்சன் சைலஸ்

பள்ளிப் பருவத்திலும் வேலையில் சேர்ந்த பின்னர் பணி காரண மாகவும் பல தொண்டூழிய நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 24 வயது சரவணனுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உடற் குறையுள்ளவர்களைச் சந்தித்துப் பேசியது வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. கிறிஸ்மஸ் என்றால் பகிர்ந்து கொடுத்தல் என்பதைப் பலமுறை கேள்விப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், இந்த ஆண்டு அதை முழுமையாக வெளிப்படுத்துவதற் கான வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறார். "பணம், பொருள் ஆகியவற் றுக்கு அப்பாற்பட்டு அடுத்தவர் களுடன் நேரம் செலவிடுவதும் கிறிஸ்மஸ் பண்டிகையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று என்பதைப் புரிந்துகொண்டேன்," என மேலும் சொன்ன அவர், உடற்குறை யுள்ளவர்களுக்கான 'செஷாயர்' இல்லத்திற்கு நான்கு பேர் கொண்ட சிறு குழுவுடன் கடந்த 16ஆம் தேதி சென்றார்.

சக நண்பர்களுடன் இணைந்து உடற்குறையுள்ளவர்களுக்கான 'செஷாயர்' இல்லவாசிகளுடன் கிறிஸ்மஸ் பண்டிகையைக் குதூகலத்துடன் கொண்டாடினர் சரவணனும் (ஸ்பைடர்மேன் உடை) கிரணும் (சூப்பர்மேன் உடை). படம்: செஷாயர் இல்லம், கிரண்.