சுதாஸகி ராமன்
கல்வியில் துளியும் ஆர்வம் இல்லை. பாடங்களில் அக்கறை செலுத்தாததாலும் ஆசிரியர்களு டன் அடிக்கடி சண்டை போட்ட தாலும் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படித்தான் உயர்நிலை ஒன்றாம், இரண்டாம் வகுப்பு களைக் கழித்தார் ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி மாணவரான டிவினேஷ் ஜூட் வின்சென்ட், 16. எனினும், டிவினேஷை அவருடைய ஆசிரியர்கள் கைவிட வில்லை. கொடிகள் பற்றிப்படர உதவும் சுவரைப் போலவே டிவினேஷ் முன்னேற அவரின் ஆசிரியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். நாளடைவில், ஆசிரியர்களை யும் அவர்களின் நற்செயல்களையும் டிவினேஷ் புரிந்துகொள்ளத் தொடங்கினார். சக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதைக் கண்டு தாமும் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தார். உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது பாடங்களில் ஆர்வமில்லா மல் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட டிவினேஷ், இந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வில் ஒரு பாடத்தில் ஏ நிலைத் தேர்ச்சி, மற்ற பாடங்களில் சி நிலைத் தேர்ச்சிகளுடன் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆசிரியர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் இந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வில் குறிப்பிடத்தக்க- தேர்ச்சி பெற்றுள்ள ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி மாணவர் டிவினேஷ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

