சிங்கப்பூரர்களை மீண்டும் பரவசப்படுத்தவரும் 'த லயன் கிங்'

சிங்கப்பூரர்களை மீண்டும் பரவசப்படுத்தவரும் 'த லயன் கிங்'

1 mins read
7fe39dfb-37ef-4878-9950-8b0ca333729c
-

திரைப்படத்தில் பார்த்த காட்சிகள் கண்முன் நடமாடி சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைப் பெற மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு. நியூயார்க் நகரின் 'பிராட்வே' எனும் பிரம்மாண்ட திரையரங்குகளில் 1997ஆம் ஆண்டில் முதல் முறையாக அரங்கேறிய டிஸ்னி நிறுவனத்தின் 'த லயன் கிங்', கடைசியாக சிங்கப்பூர் மேடையை 2011ஆம் ஆண்டு அதிர வைத்தது. உலகெங்கும் சுற்றி வரும் இந்த மாபெரும் படைப்பை இதுவரை 90 மில்லியன் பேர் பார்த்து ரசித்து பரவசம் அடைந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் உயிருள்ள விலங்குகளைப் பிரதிபலித்து தங்கள் திறன்களை வெளிப் படுத்த உள்ளனர்.