ஞாபக மறதிக்குப் புதிய சிகிச்சை முறை

1 mins read
fd1a1e76-93e4-4fa1-8f95-f3f1ed55bf17
-

ஞாபக மறதி நோயால் பாதிக்கப் பட்டுள்ள முதியோர், விளையாட்டு களில் ஈடுபடும்போது நினைவாற் றல் இழப்பையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவதையும் தடுக்க முடியும் என்கிறார் நன்யாங் பல துறைத் தொழிற்கல்லூரி மாணவி யான 22 வயது கோஷலா பாலு. 75 வயதாகும் தமது பாட்டிக்கு ஞாபக மறதி இருப்பதாகச் சொன்ன கோஷலா, அதனால் அந்நோயின் தன்மையைப் பற்றித் தாம் அறிந்து இருந்ததாகக் கூறினார்.

"தங்களுக்கு ஞாபக மறதி இருப்பதையே பலரும் அறியாமல் இருக்கலாம். அவ்வேளைகளில், அவர்களின் குடும்பத்தாரும் நண் பர்களும் அந்நோய்க்கான அறிகுறி களை அடையாளம் காண உதவு வது முக்கியம்," என்று கோஷலா வலியுறுத்துகிறார். மார்சிலிங்கில் அமைந்துள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்லத் தில் வசிக்கும் மூத்தோருக்காக அங்குள்ள அறைகளில் ஒன்றில் 'சிகிச்சைச் சுவர் (therapy wall)' ஒன்றை நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சுகாதார அறிவியல் பள்ளியில் தாதிமைத் துறையில் பட்டயம் பயிலும் 21 மாணவர்கள் அமைத்துள்ளனர். அதாவது, காட்சி, தொடு உணர்வு சார்ந்த, கேட்டல் தொடர் புடைய இந்த இருவழித் தொடர்பு அம்சங்கள் சுவரில் அமைக்கப்பட் டுள்ளன. அதை அடிப்படையாக வைத்து ஞாபக மறதி நோயை எதிர்கொள்ள புதிய சிகிச்சை முறை ஒன்றை மாணவர்கள் உரு வாக்கியுள்ளனர்.

சக மாணவர்களுடன் இணைந்து 'சிகிச்சை சுவர்' அமைத்த கோஷலா பாலு (இடது). படம்: கோஷலா பாலு