பிடித்தமான துறைக்குச் செல்ல 'ஓ' நிலை தமிழ்த் தேர்வின் மதிப்பெண்கள் 17 வயது முகமது இர்ஃபானுக்குக் கைகொடுத்தது. சீமெய் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இர்ஃபான், கடந்த ஆண்டு 'ஓ' நிலை மாணவர்களுக் கான தமிழ்த் தேர்வை எழுதி 'பி3' மதிப்பெண் பெற்றார். பிங் யீ உயர்நிலைப் பள்ளியின் வழக்க நிலை தொழில்நுட்பப் பிரிவு மாணவரான இர்ஃபானுக்குத் தமிழின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் 'பிஎஸ்எல்இ' தேர் வின் தமிழ்ப் பாடத்தில் அவர் 'ஏ' மதிப்பெண் பெற்றார்.
இர்ஃபானைப் போன்று கல்வி அமைச்சின் பாடங்களின் அடிப் படை யில் தர வரிசைத் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்களுள் ஒருவர் குவீன்ஸ்டவுன் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 17 வயது ரோஸ்நாரா பேகம். வழக்கநிலை மாணவியான இவருக்கு உயர்நிலை ஒன்றில் விரைவுநிலை மாணவர்களுடன் இணைந்து 'ஓ' நிலை தமிழ்த் தேர் வுக்குத் தயாராவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 'பி3' மதிப்பெண் பெற்ற ரோஸ் நாராவும் 'பிஎஸ்எல்இ' தேர்வின் தமிழ்ப் பாடத்தில் 'ஏ' மதிப்பெண் பெற்றவர்.

