முஹம்மது ஃபைரோஸ்
உதவி தேவைப்படுவோரின் குரல் களுக்குச் செவிசாய்த்து அவர் களின் வாழ்வில் ஒளியூட்டும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகிறார் குமாரி பிரியா மாதவன், 27. 2014ஆம் ஆண்டு முதல் ஹுவி யோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மூலமாக தொண்டூழியம் புரிந்துவரும் குமாரி பிரியா, இப்போது அக்குழு வின் உதவிச் செயலாளராக இருக்கிறார். சமூகத்தில் வசதி குறைந் தோரை உதவி திட்டங்களுடன் இணைக்கும்போது ஒருவித மன நிறைவு கிட்டுவதாகவும் அது தமது தன்னம்பிக்கையை வளர்க்க உதவியதாகவும் சொன்னார் வங்கி அதிகாரியாகப் பணிபுரியும் குமாரி பிரியா. வசதி குறைந்தோரைக் கருத் தில்கொண்டு விழாக்காலங்களில் ஹுவி யோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு வழங்கிய பற்றுச்சீட்டுகளையும் அன்பளிப்புப் பைகளையும் விநியோகிக்க குமாரி பிரியாவும் அவருடைய குழுவின ரும் உதவினர்.
கடந்த 2016ஆம் ஆண்டில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு 'தீபாவளி ஷைன்' எனப்படும் திட்டத்தை வழிநடத்திய பிரியாவும் (நடுவில்) அவரது குழுவினரும் வசதிகுறைந்த குடும்பங்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அன்பளிப்புப் பைகளை வழங்கினர். படம்: பிரியா மாதவன்

