3.83 புள்ளிகளுடன் பட்டயம் கௌதம் புஷ்பநாதன்

3.83 புள்ளிகளுடன் பட்டயம் கௌதம் புஷ்பநாதன்

1 mins read
099d7c4f-81ae-4ebc-a9df-83582a32dfb9
-

சாதாரண நிலை தேர்வில் சிறப்பாக செய்வில்லை என்ற போதிலும் ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரியில் விடாமுயற்சியுடன் படித்து இயந்திரத்தொழில் செயற் பாடுகள் நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார் கௌதம் புஷ்பநாதன், 20. அவர் 3.83 புள்ளிகளுடன் பட்டயம் பெற்றுள்ளார். வேலை அனுபவக் கல்விக்காக அவர் மியன் மாரில் இருக்கும் 'டரென்ஸ் டிசைன் ஃபர்னிஷ்ங்' நிறுவனத்துடன் 20 வாரங் களுக்கு நிபுணராகப் பணி புரிந்து சிறப்புத் தேர்ச்சி பெற்றார். பல்வேறு திறன்களைக் கொண்டவராக இருப்பது முக்கியம். அதற்குச் சான் றாக கௌதம் அனைத் துலகத் தொழில் துறையில் இன்னொரு சான்றிதழையும் பெற்றுள்ளார்.

ரிபப்பளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ (வலமிருந்து இரண்டாவது), தமது பெற்றோர் ஆகியோருடன் கௌதம் புஷ்பநாதன். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி