கடற்துறை அறிவியலில் பட்டயம் பெற்ற ஷோபனா

1 mins read
8bf72426-e281-48ed-97fd-dc44963abf16
-

சிறு வயதிலிருந்தே கடல், மீன்கள் ஆகியவை தொடர்பாக மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள 19 வயது மோ.ஷோபனா ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்று கடற்துறை அறிவியலில் பட்டயம் பெற்றுள்ளார். அவரது படிப்பின் ஒரு முக்கிய அங்கமாக சீனாவில் 'ஓ‌ஷியனஸ்' குழுமத்தில் அனுபவக் கல்வி பெற்றார். ஆரம்பத்தில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோதிலும் இரண்டு மாதங்களிலேயே சீனமொழியைக் கற்றுக்கொண்டார்.

"என் பெற்றோர் என் விருப்பத்தை ஊக்குவித்து பெரும் ஆதரவு அளித்தார்கள். மனதை சோர்வடையச் செய்யும் வகையில் மற்றவர்கள் பேசினாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பயமின்றி தங்களுக்கு விருப்பமானதை இளையர்கள் செய்ய வேண்டும்," என்று ஷோபனா தெரிவித்தார்.

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி