சுடச் சுடச் செய்திகள்

பொறியியல் துறையில் சாதனை புரிந்து வரும் திவ்யா

ஆண்கள் அதிகம் உள்ள துறை பொறியியல் என்ற ஓர் எண்ணம் பொதுவாகவே சமுதாயத்தில் நிலவி வர, அத்துறையில் படித்துச் சிறப்புத் தேர்ச்சி பெற்றதுடன் அத்துறையில் விரைந்து முன்னேறி உயர் பதவியில் சாதித்தும் வருகிறார் ஒரு பெண். அவர்தான் 34 வயது திருமதி திவ்யா விநாயச்சந்திரன்.“பொதுவாகப் பொறியியல்துறையில் உடலுறுதி தேவை.

அதனால் ஆண்களே இதற்குப் பொருத்தமானவர்கள் என்ற தவறான எண்ணம் சமுதாயத்தில் இருக்கிறது.

“ஆனால் காலம் மாறி வருகிறது. நான் மின்சார மின்னணு துறையில் படித்தபோது வகுப்பில் ஆண்களும் பெண்களும் சமநிலையில் இருந்தார்கள். பொறியியல் துறையில் அதிகப் பெண்கள் ஈடுபாடு காட்டி அதில் சேர முன்வருகிறார்கள்,” என்றார் திருவாட்டி திவ்யா.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘மைக்ரோன்’ நிறுவனத்தில் கடந்த சுமார் 13 ஆண்டுகளாக பொருட்களின் தரத்தை உறுதி செய்வது தொடர்பிலான மூத்த பொறியாளராக

வேலை செய்து வருகிறார்.

தெமாசெக் பலதுறைக் தொழிற்கல்லூரியில் மின்சார மின்னணுவியல் துறையில் பட்டயப் படிப்பை 2005ஆம் ஆண்டில் முடித்த திருமதி திவ்யா ‘மைக்ரோன்’ நிறுவனத்தில் துணைப் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து மறுஆண்டு‘மைக்ரோன்’ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் கிடைத்த கல்வி உபகாரச் சம்பளத்தின் மூலம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

“பள்ளியில் படிக்கும்போது எனக்குக் கணக்கும் இயற்பியலும் பிடிக்கும். தொழில்நுட்பம் எப்படிபிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது என்பதை அறிந்துகொள்வதில் எனக்கு அதிக நாட்டம் இருந்தது. அதனால் பொறியியல் துறையைத் தேர்வு செய்தேன்.“நம் தனிப்பட்ட ஆர்வத்திற்கு ஏற்ற ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்,” என்று வலியுறுத்தினார் திருமதி திவ்யா.

‘மைக்ரோன்’ நிறுவனத்தில் பல பிரிவுகளுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைப்பதாகவும் பல துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் bறிப்பிட்ட இவர், இதனால்தனது வேலைத்திறன் தொடர்

பான தேர்ச்சிநிலை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

“நிறுவனத்தின் ஊழியர்களோடு நட்புறவு கொண்டிருப்பதுவேலையில் முன்னேறுவற்கு முக்கியம். பல பின்னணிகளையும் கலாசாரங்களையும் சேர்ந்தவர்களோடு இணைந்து செயல்படுவது தொடர்ந்து வெற்றிகளை

அடைவதற்கான பாதையைஅமைத்துத் தரும்,” என்றார் திருமதி திவ்யா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon