உயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர்ந்து சிறந்த வீரராகத் திகழ வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த ஜே. ஹரிஹரனுக்கு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைத் துள்ளது.

சிங்கப்பூர் ராணுவ நிபுணத் துவ பயிற்சிப் பள்ளியில் வெற்றி கரமாக 22 வாரப் பயிற்சியை முடித்துள்ள ஹரிஹரனுக்கு இம்மாதம் 23ஆம் தேதி அன்று மதிப்புக்குரிய ‘தங்க இடைவாள் விருது’ வழங்கப்பட்டது.

இது பயிற்சியில் ஈடுபடும் சிறந்த ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கப்படும் உயர் விருது.

இளம் வயதில் தாயார் இவரை ராணுவம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு அழைத்துச் சென்ற போது, ராட்சத ராணுவச் சாதனங் களையும் வாகனங்களையும் கண்டு வியந்துபோனார் ஹரி ஹரன்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை அவருக்குள் அப் போதே ஊற்றெடுத்தது.

ராணுவ வீரர்களின் கட்டுப் பாடான, சவால்மிக்க வாழ்க்கை முறை இவரை வெகுவாகக் கவர்ந்தது.

சிறு வயதிலேயே ஏற்பட்ட அந்த ஆவல் இவர் சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபோதும் தொடர்ந்தது. அங்கே இவர் தேசிய ராணுவ மாணவர் படையில் சேர்ந்தார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் தன் உயர்நிலைப் பள் ளியின் தேசிய ராணுவ மாணவர் படையில் ராணுவ மாணவர் அதிகாரியாகச் சேவை ஆற்றி னார்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழில் கல்லூரியில் விநியோக நடை முறை நிர்வாக பட்டயக் கல்விப் படிப்பை முடித்த ஹரிஹரன், தன் வாழ்க்கையின் அடுத்த இலக்கு குறித்துத் தெளிவாக இருக் கிறார்.

தற்போது இவர் நீ சூன் ராணுவ முகாமில் தளவாட ஏற் பாடுகளில் உதவும் பணியில் சேவையாற்றுகிறார்.

இவர் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, தளவாட ஏற்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறார்.

‘தங்க இடைவாள் விருது’ கிடைத்ததில் ஹரிஹரனுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. "பயிற்சியின்போது தலைசிறந்த வீரர்களின் பெயர்ப் பட்டியலில் என்னுடைய பெயர் இடம்பெற வில்லை என்று என்னுடைய மேலதிகாரிகள் கூறினர். அதைக் கேட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் நான் மனம் தளராமல் கடினமாக உழைத்தேன்," என்று ஹரிஹரன் கூறினார்.

இச்சிறப்பு விருதைப் பெற்ற தால் ராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இவர் மீதுள்ள எதிர்பார்ப்புகள் கூடி யுள்ளன என்றும் அதனால் தானும் அவர்களுடைய நம்பிக் கைக்கு ஏற்றவாறு தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட விரும்பு வதாகவும் ஹரிஹரன் விவரித் தார்.

ராணுவப் படையில் தொழில் முறை பணியில் சேர்ந்துள்ள ஹரிஹரன் தன் குடும்பத்திலேயே முதல் நபராக இவ்வாறு செய்துள் ளார்.

அவருடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் முழு ஆதரவும் தனக்கு என்றும் இருந்து வரு வதாகக் கூறுகிறார்.

எதிர்காலத்தில் ராணுவ அதிகாரி பயிற்சித் திட்டத்திற்குத் தகுதிபெறுவது ஹரிஹரனின் விருப்பம்.

தளவாடத் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டு சாதனைப் படிக்கட்டில் ஏறத் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் இந்த 24 வயது இளையர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!