தமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு

ப. பாலசுப்பிரமணியம், எஸ். வெங்கடேஷ்வரன்

தாய் மொழியிலும் இலக்கியத்தி லும் ஆர்வம் கொண்டுள்ள மாண வர்கள் தங்கள் மொழி ஆற்றலை மேலும் வளர்த்துக்கொள்ள  மொழி விருப்பப் பாடத் திட்டம்  2020ஆம் ஆண்டிலிருந்து 15 உயர்நிலைப் பள்ளிகளில் அறிமுகம் ஆகிறது.

காமன்வெல்த், ரிவர்சைட், ஈசூன் டவுன் ஆகிய மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் மாண வர்கள் தமிழ் மொழியை விருப்பப் பாடமாகப் பயிலலாம்.

உயர்நிலை இரண்டுக்கான தமிழ்மொழி ஆண்டிறுதித் தேர் வில் சிறந்த தேர்ச்சி பெறும் மாண வர்கள் மொழி விருப்பப் பாடத் திட்டத்திற்குத் தகுதிபெறுவர்.

இத்திட்டத்தில் சேரும் மாண வர்கள் தங்கள் ‘ஜிசிஇ’ சாதாரண நிலைத் தேர்வுப் பாடமாக தாய் மொழி இலக்கியம் படிக்க வேண்டும். ஒருங்கிணைந்த கல் வித் திட்டத்தில் (IP) படிக்கும் மாணவர்கள் பள்ளி சார்ந்த தாய் மொழி இலக்கியப் பாடத்தைப் பயில்வர். சீனம், மலாய், தமிழ் இலக்கியத்தை மாணவர்கள் தேர் வுப் பாடமாக அன்றி, விருப்பப் பாடமாகப் பயிலும் இந்த ஈராண்டு மொழி விருப்பப் பாடத் திட்டம் 1990ல் தொடக்கக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டது. தொடக்கக் கல்லூரிகளில் சீனம், மலாய் மொழிகளில் நடத்தப்பட்டு வந்த இந்த விருப்பப் பாடத்திட்டம் தற் போது தமிழுக்கும் நீட்டிக்கப்படு கிறது.

இந்தப் படிப்பு தேர்வுக்கான பாடத்திட்டத்தைக் கொண்டிருக் காது. மாணவர்கள் விருப்பத்துட னும்  ஆர்வத்துடனும் மொழி ஆற் றலை வளர்க்க எழுத்தாளர் சந் திப்புகள், இலக்கிய விரிவுரைகள், முகாம்கள், வெளிநாட்டுக் கல்விப் பயணங்கள் எனப் பல்வேறு நட வடிக்கைகள் இடம்பெறும். 

“உயர்நிலைப் பள்ளியில் இத் திட்டத்தில் சேரும் மாணவர்கள் தொடக்கக் கல்லூரியிலும் விருப் பப் பாடத்திட்டத்தில்  தொடர்ந்து பயிலலாம். இப்பாடம் இடம்பெற்று உள்ள தொடக்கக் கல்லூரியை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்,” என்று கூறினார் ரிவர்சைட் உயர் நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் திருமதி குமார்.  

தற்போது ரிவர்சைட் உயர் நிலைப் பள்ளியில் பயிலும் இரு உயர்நிலை மாணவர்கள் அடுத் தாண்டு தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் சேர ஆவலாக உள்ளனர்.

“வீட்டில் தமிழ் பேசும் குடும்பச் சூழலிலிருந்து வரும் எனக்குத் தமிழ்ப் பண்பாடு, மரபு போன்ற வற்றை மேலும் ஆழமாகக் கற்க  வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது," என்று தெரிவித்தார் அப்பள்ளியில் உயர்நிலை இரண் டாம் வகுப்பில் பயிலும் சாயிஸ்வரன் சயன்.

மொழி விருப்பப் பாடத்திட்டத் தின் நடவடிக்கைகள் தன்னைக் கவர்வதாகவும்  எதிர்காலத்தில் தமிழ் சார்ந்த துறையில் பணி புரிவதற்கு இது ஒரு நல்ல அடித்தளமாக விளங்கும் என்றும் கருதுகிறார் ரிவர்சைட் உயர் நிலைப் பள்ளி மாணவர் அம்ரிதா பூர்ணா கிரண்.  

“மொழி விருப்பப் பாடத்திட்டம் மாணவர்களுக்கு மொழி பற்றிய பரந்த கண்ணோட்டத்தை வழங் கும். கலாசாரம், கலை, இலக்கியம் போன்றவற்றை சுவாரசியமான முறையில் அறிந்துணர்வதன்  மூலம் மாணவர்களுக்கு ஆழமான மொழிப் புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு,” என்று கூறினார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி ஆசிரியரான திருவாட்டி கமலவாணி பாலையன், 48. 

“விரிவுரைகள், மொழி முகாம், கல்விப் பயணம் போன்ற பல மொழி சார்ந்த நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்பார்கள். அனுபவக் கல்விமுறையில் கற்க வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குச் செல்லலாம். கலாசாரம், கலை ஆகியவற்றைக் கண்கூடாகப் பார்த்துக் கற்க வாய்ப்புகளும் இருக்கும்,” என அவர் விளக்கினார். மொழி விருப் பப் பாடத்தை ஈராண்டுகள் பயிலும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.   

மேலும் இத்திட்டத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு பல் கலைக்கழகத்தில் சேரும்போது அவர்களின் தகுதிநிலை மேம்பட்ட தாக இருக்கும். 

அத்துடன் கல்வி, ஊடகம், மொழிபெயர்ப்பு போன்ற தமிழ் சார்ந்த துறைகளில் பணிபுரிவ தற்கும் இப்படிப்பு கைகொடுக்கும் எனக் கூறினார் கடந்த 20 ஆண்டு களாக தமிழாசிரியராகப் பணி யாற்றி வரும் திருவாட்டி கமலவாணி. 

இந்தத் திட்டம் முதலில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக் கக் கல்லூரியிலும் தேசிய தொடக் கக்கல்லூரியிலும் வழங்கப்படும். அடுத்த ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவர்களும் ‘ஹெஜ்2’ (H2) தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களும் இந்தத் திட்டத் தைத் தேர்வு செய்யலாம். 

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தற்போது தமிழ் இலக்கியம் படித்து வரு கிறார் இரண்டாம் ஆண்டு மாண வரான எரட்டி கண்ணன் யுகேஷ், 18. “எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதில் சிறிது வருத்தம் உண்டு. இருப்பினும் இந்தப் புதிய விருப்பப் பாடத்திட்டம் வரவேற்கத்தக்கது. பாடத்திட்டத் தைத் தவிர்த்துத் தமிழில் ஆர் வமுள்ளவர்கள் இன்னும் ஆழமான நிலையில் தமிழ் மொழியைப் படித் துப் பயனடையலாம்,” என்றார் அவர்.

“வீட்டில் தமிழ்மொழியில் அதிகமாகப் பேசி வளர்ந்ததால் எனக்குத் தமிழ்மொழி மீதான பற்று அதிகம். அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் இந்தத் திட்டம் என்னைப் போன்ற மாணவர்களுக் குச் சுவாரசியமான முறையில் தமிழ்மொழி கற்க வாய்ப்புகள் தரும்,” என்றார் முதலாமாண்டில் பயிலும் 17 வயதுடைய காவ்யா பிரபாகரன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்