ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்  கல்லூரி படைத்த நாட்டிய விழா

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி ‘மொமெண்டம்’ என்ற நாட்டிய விழாவை மே மாதம் 25, 26 தேதிகளில் மேடையேற்றியது. 

விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியிலிருந்தும் மற்ற கல்வி நிலையங்களிலிருந் தும் 13 குழுக்கள் பங்கேற்று பல் வேறு நடனங்களைப் படைத்தன.

பெரும்பாலான குழுக்கள் படைத்த மேற்கத்திய நடனங் களுக்கிடையே  ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த பரதநாட்டியம் பார்வை யாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் இந்திய கலாசாரக் குழு ‘த்வய்ட்டா’ என்ற நாட்டியப் படைப்பை மேடையேற்றியது. 

சூரியனுக்கும் கடலுக்கும் இடையே நிகழும் உரையாடலைப் பற்றியதாக இந்த நடனத்தை திரு வெற்றிவேலன் குணசேகரன், குமாரி கவிதா கிரு‌ஷ்ணன் ஆகிய இருவரும் வடிவமைத்திருந் தனர். நடனத்தில் பங்கேற்றவர் களில் 11 நடனமணிகள் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் இந்திய கலாசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள். மூவர் மாயா நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

நடனக் குழுவின் தலைவரான 19 வயது ஜீவனா ரவிச்சந்திரன், “இந்தக் கருப்பொருளில் நடனம் அமைத்து ஆடுவது எங்களில் பலருக்கு புதிய அனுபவமாக இருந்தது,” என்றார். 

ஜீவனா, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் மருந்து அறிவியல் பட்டயக் கல்வியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார். படிப்பினூடே, ஐந்து மாத பயிற்சி கடுமையானதாக இருந்ததாகக் கூறிய அவர், அனைவரும்  ஒரு வருக்கொருவர் ஊக்கமளித்து,  நடனத்தை வெற்றிகரமாகப் படைத்ததாகக் கூறினார்.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்

09 Dec 2019

பார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி

குண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்

09 Dec 2019

குண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்